புதியதோர் உலகம் செய்வோம்
137
உலகப் பெரும்போர் முடிவில் ஒரு சுற்றுலாவாணன் பிரான்சு நாட்டுச் சிற்றூர் சென்றிருந்தான். ஊர் எல்லையில் ஒரு சின்னஞ்சிறு குழந்தை அவனைக் கண்டதும், ‘ஐயையோ! முழு மனுசன் வந்துட்டானே!' என்று அலறிப் புடைத்துக் கொண்டு ஓடிற்று. அதன் அலறல் சுற்றுலாவாணனுக்கு மலைப்பைத் தந்தது. ஊருக்குள் சென்ற பின்தான் அதன் கோரப்பொருள் அவனுக்கு முழு உருவில் தெரியவந்தது.
அந்த ஊரில் போரின் கொடுமை உக்கிரதாண்டவமாடிற்று. காலிழந்தவர், கையிழந்தவர், கண்ணிழந்தவர், மூக்கிழந்தவரென இழந்தவர் வரிசையிலேயே எல்லாரும் காணப்பட்டனர். உறுப்பிழக்காதவராக எவரையுமே காணவில்லை.
உறுப்பிழந்த உருவத்தைக் கண்டால் குழந்தைகள் அச்சங் கொள்ளுதல் இயல்பு. ஆனால் மேற்குறிப்பிட்ட பிரபஞ்சக் குழந்தை உறுப்பிழந்த உருவங்களையே கண்டு பழகியிருந்தது. உறுப்பிழந்த உருவம்தான் அதற்கு மனித உருவாய்த் தோன்றிற்று. ஆகவேதான் முதன் முதலாக உறுப்பிழக்காத ஒரு முழு மனிதனைக் கண்ட போது அது பேயைக் கண்ட மாதிரி விழுந்தடித்துக் கொண்டு ஓட நேர்ந்தது.
உலகத்திலும் சரி, இந்தியாவிலும் சரி-மொழிகளின் நிலை ன்று பொதுவாக இந்தப் போர்க்கால பிரான்சின் நிலையை ஒத்ததாயுள்ளது. தமிழகத்தின் நிலையோ மேற்குறிப்பிட்ட சுற்றுலாவாணன் நிலையை ஒத்தது.
மனிதனின் உறுப்புக்கள் வெறுந் தோற்றத்துக்குரிய உடலுறுப்புக்கள் மட்டுமல்ல. ஒவ்வோர் உறுப்பும் மனிதன் வாழ்விலேயே ஒரு பகுதி, அவனது உலகிலேயே ஒரு பகுதி இயங்குவது ஆகும். எனவே கண் இல்லாதவனுக்குப் பார்வையில்லாதது மட்டுமன்று குறை அவனது உலகிலே ஒளியே கிடையாது. நிறம் கிடையாது. அழகு கிடையாது. மலரும் இலையும் அவனுக்கு ஒன்றுதான். பகலும் இரவும் அவனுக்கு வேறல்ல. இதுபோலவே காது இல்லாதவனுக்கு ஓசை என்பதே இன்னதென்று தெரியாது. அவன் உலகில் மொழி கிடையாது. இசை கிடையாது. உடலுறுப்புகளுக்கும் வாழுலகுக்கும்
யேயுள்ள இதே தொடர்பு மொழியிலும் மொழியுலகிலும் உண்டு. ஏனெனில் உடலின் உறுப்புக்கள் போன்று, மொழிக்கும்