பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




140

அப்பாத்துரையம் - 4

உலகவரலாற்றில் நான் மேலே குறிப்பிட்ட மூன்று இனங் களில்தான் தொன்றுதொட்டுத் தாய்மொழி ஆட்சி மொழியாய் உரிமைபெற்று நிலவுகின்றது.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்குமுன் ஆட்சிமொழியாய் இயங்கிய தாய்மொழிகள் தென்னாட்டு மொழிகள் மட்டுமே.

தெய்வவழக்கு அல்லது சமய வழக்குரிமை என்பது பண்புத்திற வகையில் தமிழுக்குக் கிடைத்தபேறு. உலகில் வேறு எந்த மொழிக்கும் அதில் பத்தில் ஒரு பங்கு கூடக் கிடைக்க வில்லை. ஒன்று துணிந்து கூறலாம் - தமிழகத்துச் சமயங்கள் யாவும் தமிழையே தம் சமயவழக்கு மொழியாகக் கொண்டுள்ளன. தவிர, தமிழகத்துக்கு வந்த புதிய சமயங்களுக்குக்கூடத் தமிழில் பேரளவான இலக்கியம் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவின் தேசியச் சமயங்களாயிருந்த புத்தம், சமணம் ஆகிய நெறிகளின் இலக்கியத்தில் மிகப் பெரும்பகுதியும் மிகச் சிறந்த பகுதியும் தமிழில்தான் உள்ளன. மொத்தத்தில் உலகில் மற்றெல்லா மொழிகளிலும் உள்ள சமய இலக்கியம் முழுதும் திரட்டினால்கூட, அறிவிலோ, பண்பிலோ அது தமிழர் சமய இலக்கியத்தின் முன் பெரிதும் தலைகுனிய வேண்டிவரும். தெய்வமொழிகள் என்று எவ்வெவற்றையோ சில காலம் சிலர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் கடவுள் தமிழ் ஒன்றைத்தான் தொன்மொழி என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.தமிழிலக்கியத்தை உணர்ந்த உலக மொழியறிவாளர் அனைவரிடையேயும் இதுபற்றி கருத்து வேற்றுமை கிடையாது.

மொழியின் பண்புத்திறங்களுள் நாம் மேலே ஆறாவதாகக் குறித்த கூறு உண்மையில் அதற்கு முன்னுள்ள ஐந்து கூறுகளின் முழு நிறைவே ஆகும். தன் இலக்கியமும் தன் அறிவுத் துறையும் தன் ஆட்சியும் தன் சமயவழக்கும் தாய் மொழியாகவே கொண்ட உலகின் முதல் தேசிய மொழியும் தமிழே - முழுநிறைவான தேசியமொழி இன்றுகூட அது ஒன்றே. தமிழ் மூவரசர் என்ற தமிழ் வழக்கு உலகில் எங்கும் எக்காலத்திலும் இதுவரை இல்லாத ஒன்று. தமிழ், தமிழர், தமிழகம் என மொழியில் இனமும் நாடும் ஒரே பெயர் பெற்ற இனமும் உலகில் பிறிது கிடையாது. அரங்கேற்றம் தமிழகத்தின் தனிப்பண்பு. கவியரங்கம் தமிழகமும் அரபு நாடும் மட்டுமே அறிந்தவை. சங்கம் தமிழகமும் சீன,