புதியதோர் உலகம் செய்வோம்
143
எல்லா ஊர்களும், நகர்களும், எல்லா மாவட்டங்களும், வகுப்புக்களும், தொழில்களும் தமிழிலக்கியத்தில் பெற்றுள்ள சரிசமப் பிரதிநிதித்துவம் போல ஒன்றை மேலை நாட்டு வாழ்வுகளில்கூட நாம் இன்றும் காணமுடியாது என்பது ஊன்றிக் காணத்தக்கச் செய்தி ஆகும்.
மொழிக்கும் மொழி பேசும் இனத்துக்கும் இடையே நூற்றாண்டு கடந்து நூற்றாண்டாக இனவாழ்வுக்கால முழுதும் உள்ள இடையறா நீடித்த தொடர்பே இனப்பண்பு ஆகும். தமிழில் முழு அளவில் இப்பண்பு தனித்தமிழ் மரபினாலும் தனித்தமிழ் இயக்கத்தாலும் பேணப்பட்டு வருகிறது. தமழுக்கு அடுத்தபடியாக உலகில் இப்பண்பு பேணப்பட்டுள்ள மொழிகள் சீனம், செர்மன், ருசிய மொழிகளே.
தமிழ், சீன முதலிய ஒரு சில மொழிகளில்தான் மொழியும் மொழியினமும் இணைபிரியாமல் ஆயிரக்கணக்கான ஆண்டு நீடித்து மொழியின் பண்பு இனத்திலிருந்தும் இனத்தின் பண்பு மொழியிலிருந்தும் பின்னி ஒன்றுபட்டு னத்தேசியமாக வளர்கின்றன. தனித்தமிழ் இப்பண்பை இன்றும் செறிவாக்கு கின்றது. ஏனெனில் தமிழ் மொழிக்கும் தமிழினத்துக்கும் உள்ள நீடித்த உறவு தமிழ்ச் சொற்களுக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் தனித்தமிழ்ச் சொற்கள் காரணமாகவே கிடைக்கின்றது. தமிழ்மொழி, தமிழிலக்கியம் ஆகியவற்றை இடையறாப் பொங்கல் வளத்துக்கும் உயிராற்றல் குன்றாத வளமான வளர்ச்சிக்கும் இப்பண்பே உதவுகிறது.
இந்தப் பண்பைப் பிற மொழிகளும் வளர்த்தால் அவையும் உலகில் நிலையாக நீடித்து வளர இடமுண்டு. ஆனால் இன்றும் இப்பண்பைக் கண்டுணரவில்லை.
மொழியின் பண்புத் திறங்களில் கடைசியானது, ஆனால் முக்கியத்துவத்தில் மற்றவற்றினும் ஒரு சிறிதும் குறையாதது பொதுமொழிப் பண்பு அல்லது பிறமொழித் தொடர்புரிமைத் தன்மை ஆகும்.
உலகில் நாம் வங்கக்கடல், அரபிக்கடல், செங்கடல் முதலிய பல கடல்களில் பெயர்களைக் கூறுகிறோம். ஆனால் இவை கரை பற்றிய வேறுபாடுகளேயன்றிக் கடல் நீர் பற்றிய