பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




144

அப்பாத்துரையம் - 4

வேறுபாடுகளல்ல. கரை வேறுபாடு, ஆழவேறுபாடு உப்புத் தன்மையில் வேறுபாடு, நீரோட்ட அழுத்த வேறுபாடுகள் ஆகியவை கடல்களிடையே இருந்தாலும், அடிப்படையில் உலகில் கடல் ஒன்றே. அது போலவே உலகில் தமிழ், தெலுங்கு, வங்காளம், ஆங்கிலம் முதலிய பல மொழிகள் இருந்தாலும், இவற்றிடையே நாடு, இனம், பண்பு, சொல் தொகுதி ஆகியவற்றில் வேறுபாடுகள், இருந்தாலும், இவை கால டச் சூழல் வேறுபாடுகளே தவிர வேறல்ல. உண்மையில் அடிப்படை நிலையில் மனித இனத்தின் மொழி ஒன்றே.

மொழியின் பண்புத்திறங்களுள் தற்கால மேலையுலக அறிஞர்கள் கூட ஒரு சிறிதும் அறிந்து கொள்ளாத பண்புத்திறம் மொழியின் பொது மொழித் தன்மையேயாகும். ஒவ்வொரு மொழியும் ஒரு மொழியினத்தைக் கொழுக் கொம்பாகக்கொண் டே படர்வதானாலும், அது அந்த மொழியினத்துக்கு மட்டுமே உரியதன்று, மனித இன முழுமைக்குமேயுரியது. குளத்தில் பல மீன்கள் வாழ்ந்தாலும் ஒவ்வொரு மீனுக்கும் குள முழுதும் உரியது. உலகில் பல மனிதர் இருந்தாலும் ஒவ்வொருவருக்குமே உலக முழுமையும் உரியது. ஒரு வட்டத்தின் கற்றுவரையில் கோடிக்கணக்கான புள்ளிகள் இருந்தாலும் ஒவ்வொரு புள்ளிக்கும் விட்டத்தின் மையமே மையமாகும். இந்நிலையிலேயே உலகின் ஒவ்வொரு மொழிக்கும் உலகத்தின் எல்லா மொழியினங்களுடனும் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் உரிமை உண்டு. ஆனால் உலகில் நெடுங்காலமாகப் ‘பொது மொழிகள்' என்ற பெயரால் சில பல போலி ஆதிக்கமொழிகளின் மற்றமொழிகளின் அடிப்படை உரிமையாகிய இப்பொதுமொழி

உரிமையை

டை யில் வந்து நின்று தடுக்கின்றன. முதலாளித்துவ வாணிக உலகில் வாங்குவோருக்கும் (Consumers) விற்பவர்க்கும் (Producers) இடையே போலி வாங்குவோர் போலிவிற்போராகத் தரகு இடையிட்டு தரகர் என ஏற்படுவதைக் கண்டித்த ஒரே உலக அறிஞராய்க் காந்தியடிகள் விளங்கினார். ஆனால் மொழித் துறையில் இதே இடையிட்டுத் தரகுப் பண்பை எதிர்க்க ஒரு மொழியறிஞர் இதுகாறும் உலகில் தோன்றாதது வருந்துதற்குரிய செய்தியேயாகும்.

முரசொலி பொங்கல் மலர் 1964