பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

147

குறிக்கிறார். எத்தகைய வரலாற்றுக் காரணமும் இதற்குக் கவிஞரால் தரப்படவில்லை.

இதுபோலவே, சோழர் வரலாற்றில் இராசேந்திரனுடைய கல்வெட்டுக்கள் மூலம், அவன் இரண்டாண்டுகளில் இந்தியா முழுவதும் திக்குவிசயம் செய்து இமயம்வரை தன் புகழை பரப்பிய தையும், அடுத்த இரண்டாண்டுகளில், அதுபோலவே கீழ்க்கடலில் கலம் செலுத்தி, பர்மா, மலாயா, சுமத்ரா, சாவா, செலீபிஸ், போர்னியோ எங்கும் சென்று வெற்றி விருது நாட்டியதையும் கூறுகிறது. மலாசியாவெங்கும், இந்தோனேசியா வெங்கும் இதன் சின்னங்கள் உள்ளன. காவியத்தைப் போலவே கல்வெட்டுகளும் வெற்றி பாடுகின்றன-போர்க் காரணம் குறிப்பிடவில்லை.

தொல்காப்பியக் காலப் பாண்டியன், இப்போது சுமத்ரா தீவில் இருப்பதாகக் கூறப்படும் சாலியூரைத் தலைமையிடமாகக் கொண்டு, அந்நாட்டில் தன் வெற்றிச் சின்னமாகக் கடல்நீர் தன் அடியலம்ப நின்று விழாவாற்றிய செய்தியும் சங்கப் பாடல்களில் கூறப்படுகிறது. இங்கும் வரலாற்றுக் காரணங்கள் கூறப்படவில்லை.

L

சோழன் இராசேந்திரனின் கீழ்க்கடல் போருக்குக் காரணம், தமிழகத்துக்கும் மலாயாவுக்கும் அந்நாளில் உலகக் கடல் வாணிகத் துறையில் ஏற்பட்ட போட்டியே என்று வரலாற்றா சிரியர் டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்கார் கூறியுள்ளார். ஆயிர ஆண்டுகளுக்கு முன் தமிழகமும், மலாயாவும் உலகின் பெரும் கடலாட்சி இனங்களாக இருந்த நிலைமையை இது நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது.

சேரன் கடலில், பிறகலம் செல்லாதவாறுபோல் என்று சேரரின் கடலாட்சி பற்றிச் சங்க காலப் பாடல்கள் பேசுகின்றன.

இதுபோன்ற ஒரு வரலாற்றுச் சூழ்நிலையே சங்க காலத்தில் தமிழரை இமய எல்லையை நாடச் செய்திருந்தன என்பதை அக்கால உலக வரலாறு நமக்குக் காட்டும்.

சேரன் செங்குட்டுவன் காலத்தில் வடதிசையில் அசோகனது மோரிய ஆட்சி கவிழ்ந்து, பல சின்னஞ்சிறு அரசுகள் ஒற்றுமையற்று நிலவின. இதனைப் பயன்படுத்திக்