26. இந்திர விழாவும் தமிழர் வாழ்வும்
தமிழிலக்கியத்தில் தமிழரின் தனிப்பெருந் தேசியக் காப்பியங்களாக மதிக்கப்படுபவை சிலப்பதிகாரமும் மணிமேகலையுமே. இரண்டிலுமே இந்திரவிழா தமிழர் தேசிய விழாவாக, தமிழரசரும் குடிமக்களும் ஒருங்கே கொண்டாடிய விழாவாகப் போற்றப்படுகிறது.
திருவோண விழாவும்
தமிழரால் அந்நாட்களில் பிற்காலத்தில் மார்கழி நீராடல் என வழங்கப்பட்டதை நீராடலும் இதுபோலவே தேசியப் பெரு வழக்காயிருந்தன.
இந்திர விழாவும் தைந்நீராடலும் பொங்கலும் ஒரே தமிழ்த் தேசிய விழாவின் பல வடிவுகள் தாமோ என்று எண்ண இடமுண்டு. ஏனெனில் பொங்கலின் அடுத்த நாட்கள் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் அல்லது சிறுவீட்டுப் பொங்கல் எனத் தமிழகத்தில் வழங்கப்படுவது போலவே, இந்தியாவெங்கும் அதற்கு முந்திய நாள் போகிப் பொங்கல் என்று கொண்டாடப் படுகிறது.போகி என்பது இந்திரன் பெயரேயாகும்.
பொங்கல் விழா தமிழரின் புதுமையான தேசிய விழா மட்டுமன்று உலகளவெனப் பரந்த தமிழ்ப்பண்பு வாய்ந்த உலக விழாக்களில் ஒன்று என்றுகூடக் கூறலாம். ஏனென்றால் ஓணவிழாவுடனும், சமய விழாக்களாகக் கொண்டாடப்படும் கிறித்துமசு, ஈது ஆகியவற்றுடனும், தொழிலாளர் விழாவாகக் கொண்டாடப்படும் மே விழாவுடனும் இதற்கு எத்தனையோ அடிப்படைத் தொடர்புகள் இருக்கின்றன.
இவையாவும் பெண்கள், சிறுவர் சிறுமியர் ஈடுபட்ட விழாக்களாக, குடும்ப, சமுதாய விழாக்களாக, மன்னர் குடிமக்கள் இருசாராரும் கொண்டாடி வந்துள்ள தேசிய விழாக்களாக மக்கள் இன்ப விழாவாக, உழவர் தொழிலாளர் விழாவாகத்