152) || அப்பாத்துரையம் – 4 திகழ்கின்றன. மழை விழாப் பண்பும், 'சாவா வாழ்வு' அதாவது நீடின்பம் அவாவிய விழாப் பண்பும் இவற்றில் உள்ளூர ஊடாடுகின்றன.
பொங்கல் விழாவைச் ‘சங்கராந்தி' என்று கூறிச் சமய விழாவாக்க முயல்பவர் உண்டு. ஆனால் ஆண்டில் இரண்டு சங்கராந்திகள் உண்டு. ஆடி சங்கராந்திக்கு இச்சிறப்பை யாரும் அளிப்பதில்லை. பொங்கலில் கதிரவன் வடக்கே செல்லும் பயணத் தொடக்கம் என்பதுதான் அதன் புண்ணியத் தன்மைக்குக் காரணம் என்று கூறுபவர் உண்டு. இதுவும் போலிவாதமேயாகும். ஏனெனில் வடக்குக்கு ஏன் புனிதத்தன்மை வந்தது என்பதை இவர்கள் கூற முடியாது.
+
கதிரவன் தென் கோடிக்குச் செல்லும் காரணத்தாலேயே, தமிழகத்துக்கும் தமிழுலகத்துக்கும் வடகிழக்குப் பருவக்காற்று மழையும், திரும்ப வடக்கே திரும்புவதனாலேயே தென்மேற்குப் பருவக்காற்று மழையும் பெய்கின்றன.
பொங்கலும் ஓணமும் இந்த இரண்டு மழைக்கா களுக்குரிய விழாக்களேயாகும். முதலாவது இந்திர விழா ரண்டாவது ந்திரனைப் போலவே தென்னகமாண்ட வேந்தன் மாவலி விழா என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்திரன் விழா சங்க இலக்கியங்கள் குறிப்பது. தொல்காப்பியர் இந்திரனை வேந்தன் என்ற பெயரால் மருதநிலத்துக்குரிய துணைத் தெய்வமாகக் குறிக்கிறார். திருவள்ளுவரும் இந்திரனைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
இந்திரன் மழைத் தெய்வம். திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து அதிகாரத்தை அடுத்து வான் சிறப்பை பாடுகிறார். மழையைக் கடவுட்டண்மைக்கு அடுத்தபடியாகத் தெய்வத் தன்மையுடன் தமிழர் போற்றினர் என்பதையே இது காட்டுகிறது.
இருக்கு வேதகால ஆரியர் இந்திரனையும் வருணனையும் வேறு பல இயற்கைத் தெய்வங்களுடன் வழிபட்டனர். தொல்காப்பிய காலத்திலும் திருவள்ளுவர் காலத்திலும் இந்த இருக்குவேத தெய்வங்களைத் தமிழர் ஏற்று வழிபட்டனர் என்று பல தமிழ்ப் புலவரும், பல தமிழறிஞரும் பேசியும் எழுதியும் வருகின்றனர்.