புதியதோர் உலகம் செய்வோம்
153
இது உலகளாவிய ஆராய்ச்சிப் போக்குக்குச் சிறிதும் ஒவ்வாததாகும்.
முதலாவதாக,
ம்
தொல்காப்பியம் இந்திரனையும் வருணனையும் மட்டுமன்றி, மாயோனையும் சேயோனையும் திணைத் தெய்வங்களாகக் குறிக்கிறது. மாயோனும் சேயோனும் (திருமாலும் முருகனும்) இருக்குவேத தெய்வங்கள் அல்லர் என்பது எவரும் அறிந்த உண்மை. ஆரியரால் அவை இருக்குவேத காலத்துக்குப் பலபல நூற்றாண்டுகட்குப் பின்பே ஏற்கப்பட்டவை.
இதுமட்டுமன்று.
இந்திரன் தொல்காப்பியத்தில் 'வேந்தன்' என்றே குறிப்பிடப் படுகிறான்.புராணகால ஆரியரால் அவன் வானவர் அரசன் என்றே பாராட்டப்படுகிறான். வேத காலத்தில் அவன் அவ்வாறு வானவர் அரசனாகக் கருதப்படவில்லை.
தொல்காப்பியர் இந்திரனை மருத நிலத்துக்கு அதாவது நாட்டுக்கு அரசதெய்வம் என்றார். வருணனை நெய்தல் நிலத்துக்கு, கடலுக்குத் தெய்வம் என்றார். புராணங்களும் வருணனைக் கடல் தெய்வம் என்றே கூறின. ஆனால் வேதங்கள் இந்திரனை மழைத் தெய்வம் என்று கூறவில்லை. வருணனையே மழைத் தெய்வம் என்றன.
இந்திரனைப் போலவே வானவ அரசனாகப் போற்றப் பட்டகிரேக்க ரோம தெய்வங்கள் (கிரேக்க தெய்வம் ஜியூஸ்பிதர், ரோம தெய்வம் ஜோவ் அல்லது ஜூபிடர்) உண்டு. ஆனால் இந்திரன் என்ற பெயருடைய ஒரு தெய்வம் இந்திய ஆரியரிடம் மட்டுமே உண்டு - ஆரிய இனத்தவரிடையே உலகில் வேறு எங்கும் கிடையாது!
இந்திரன் என்ற சொல்லோ, தெய்வமோ ஆரியத் தெய்வ மல்ல, இந்தியாவில் தமிழகத்தவரிடமிருந்து ஆரிய இனத்தவர் மேற்கொண்ட தெய்வமே என்பதை இது காட்டுகிறது.
இருக்குவேத ஆரியரே இந்திரனைத் தங்கள் தெய்வமாகக் குறிக்கவில்லை. பாஞ்சாலர்களின் தெய்வமாகவே குறிக்கின்றனர். பாஞ்சாலர்கள் உனக்குத் தரும் பலியைவிட மிகுதியான பலி தருகிறோம். எங்கள் தெய்வமாகி, பாஞ்சாலர்களை வெல்ல