பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




154

அப்பாத்துரையம் - 4

எங்களுக்கு உதவி செய்வான்' என்று அவர்கள் இந்திரனை

வேண்டு கிறார்கள்.

பாஞ்சாலர்கள்

ஆரியரல்லாதவர், இந்திரனும்

ஆரியரல்லாதவர் தெய்வம் என்பதை இது காட்டுகிறது.

இந்திரனைப் போலவே வருணனும் இருக்கு வேத ஆரியரால் ‘அசுரன், அசுரர்களின் தெய்வம் என்றே குறிக்கப்படு கிறான்.

பண்டைப் பாரசீக நாட்டவர் தெய்வங்களையே ‘அசுரன்’ என்றுதான் குறிப்பிட்டனர். ஆரியரல்லாதவர்களுடன் அவர்கள் மிகுதி கலந்ததினாலேயே, அவர்கள் கதிரவனைத் தெய்வமாகக் கொண்டனர். கதிரவனே அவர்களிடம் பெருந்தெய்வமாக பின் ஒரு தனிக் கடவுளே கதிரவனுருவினராக அவர்களால் வணங்கப்பட்டனர்.

பார்சிகள் இன்னும் அவ்வாறே வணங்குகின்றனர்.

வருணன் என்ற இந்தியப் பெயர் அதாவது திராவிட மொழிப் பெயர் கிரேக்க ரோமரின் யூரானஸ் என்ற தெய்வத்துடன் சொல் ஒப்புமை உடையது என்பது காணலாம். யூரான்ஸ் கிரேக்க (ரோமரால் ஆரியத் தெய்வங்கள் வருமுன்

ஆண்ட ஆரியரல்லாத தெய்வங்களின் அரசன்

(Father Titan) என்றே கொள்ளப்பட்டான்.

தொல்காப்பியர் காலத்தினும் திருவள்ளுவர் காலம் முற்பட்டது. தொல்காப்பியர் காலத்திலே வருணன் அரசத் தெய்வமாகவும், கடல் தெய்வமாகவும், இந்திரன் மழைத் தெய்வமாகவும் கொள்ளப்பட்டான். ஆனால் திருவள்ளுவர் காலத்தில் இந்திரனே மழைத் தெய்வமாகவும், அரசத் தெய்வமாகவும், கடல் தெய்வமாகவும் ஒரே முழுப் பண்பாகக் கொள்ளப்பட்டான்.

பிற்காலத்தில் கடல் என்று பொருள் கொண்ட வாரிதிருவள்ளுவரால் புதுவருவாய் தரும் மழையைக் குறிக்க வழங்கப்பட்டுள்ளது. வாரி, வருணன் இரண்டும் ஒரு பகுதியுடைய ஒரு பொருட் சொற்களே.