புதியதோர் உலகம் செய்வோம்
159
பேராசிரியர் சுந்தரனாரே இதற்கு வழிகாட்டியுள்ளார். ஏ னெனில், அவர் தாம் எழுதியது கவிதையானாலும், தமிழ் கன்னித் தாய்மொழி என்று வாளா பாடாமல் அதை மெய்ப்பித்துக் காட்ட ஆராய்ச்சியில் புகுந்துள்ளார்.
அதே ஆராய்ச்சிப் பண்பு இன்னும் ஒருபடி செல்லத் தக்கது!
தமிழ் சாவா மூவா மொழி என்பதை என்பதை வரலாறு மெய்ப்பிக்கும், ஆனால் மற்ற மொழிகள் மாள, அது மட்டும் ஏன் மாளாமல் நின்று நிலையாக வாழும் தன்மை பெற்றிருக்கிறது என்பதை வரலாறு காட்ட முடியாது.
அதை மொழியியலே காட்ட வேண்டும்.
யோக
சாவா மூவா மொழியாகத் தமிழ் அமைந்தது தெய்வ வரத்தால் அன்று; தற்செயலாக வந்தமைந்த ஒரு சாதனமன்று. சாவா மூவாத் தன்மையைக் கண்டு, அதை அவர்கள் தங்கள் மொழியில், இலக்கியத்தில், வாழ்வில், பண்பாட்டில் தோய வைத்துள்ளனர்.
இதற்குத்தான் தமிழ்ப் பண்பு என்று பெயர்.
இதனைப் பேணும் எந்த மொழியும், இனமும், நாகரிகமும்
மாளாது.
தமிழர் பேணிய இந்தப் பண்பைத் தமிழர் ஆய்ந்து காண வேண்டும். கண்டால், அது தமிழர்க்கு மட்டுமன்று; உலகம் முழுவதற்குமே ஒரு சாவா வரம் தரும் சஞ்சீவியாய்ப் பயன்படும்.
தமிழ் மொழியின் இந்தப் பண்பு, தமிழை ஒட்டி வளரும் மலையாளம், கன்னடம், களிதெலுங்கு ஆகிய மொழிகளின் குருதிமரபாக அமைந்திருப்பதால்தான். அவை இரண்டாயிரம் ஆண்டு மொழி வாழ்வும், ஆயிர ஆண்டு இலக்கிய வாழ்வும் கண்டும், இன்னும் புத்தம்புது மொழிகளுடன் போட்டியிடும் ளமையுடையவையாய்த் திகழ்கின்றன.
இந்தத் தமிழ்ப் பண்பை ஆரிய மொழிகள் பின்பற்றினால், அவையும் சாகாப் பரம்பரையாக வளர்க்க எண்ணுகிறார்கள். காலம் இதைத் தவறு என்று காட்டும்.
சமநீதி பொங்கல் மலர் 1968