பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

161

அறியவில்லை. தமிழரோ, ஆயிரத்தில் ஒரு பங்குகூட இன்னும் உணர்ந்து கொண்டதாகக் கருத இடமில்லை. உணர்ச்சியும் வெறியும் இன்னும் அறிவுடன் தொடர்பற்றதாய், செயல் திசையில் கனவுகூடக் காணும் நிலை இல்லாததாய் இருப்பதே இதற்குச்சான்று ஆகும்.

தமிழன் பெருமைகளில் ஒன்று. அது மற்ற மொழிகள் இலக்கியம் காணுமுன்பே இலக்கணமும், மற்ற மொழிகள் கலைகாணு முன்பே இயல் (விஞ்ஞானம்) ஆய்வும் கண்டுவிட்டது என்பதே; இதுமட்டுமன்று; மேலையுலகில் இருபதாம் நூற்றாண்டின் புதிய மொழி ஆய்வுகளை ஊக்குமளவில், பல திசைகளில் அவற்றைக் கடந்து மேற்செல்லும் அளவில், தமிழர் ஆயிர இரண்டாயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பே மொழியாய்வுத் துறையில் முன்னேறியிருந்தனர் என்பதே!

இதனை நாம்-தமிழராகிய நாம்-பிற நாட்டார், மேல் நாட்டாராய்ச்சியின் உதவியில்லாமல் உணர முடியாது, கனவில் சென்றெட்டக்கூட முடியாது.

தமிழிலக்கணத்தின் பெருமை து. இதை உணர்ந்தால் மட்டும், இதை உலகம் உணரும்படி செய்தால் மட்டும் வருங்காலத் தமிழகத்துக்கு, வருங்கால இந்தியாவுக்கு, வருங்கால உலகுக்கு வழிகாட்டும் பெரும் பொறுப்பைத் தமிழன் தாங்கிவிட முடியாது. ஏனெனில் இது தமிழின் பெருமை, பழந்தமிழின் பெருமை - இன்றைய தமிழகத்தின் தமிழரின், தமிழக அரசின் கடமையில் இது ஒரு கடுகளவு கூட ஆய்விடாது.

யானை மரபில் பூனையாக இன்றைய தமிழர் வாழ்கிறோம். சங்கத் தமிழின் மரபில், இளங்கோ மரபில், சாத்தனார் மரபில், தொல்காப்பியன் மரபில், வள்ளுவன் மரபில் நாம் வந்தவர்கள் என்பதில் ஒரு சிறிதளவேனும் வாய்மை இருக்குமானால், நாம் தமிழின் பருமையை ஆராய்வதுடன் நில்லாமல், குறைபாடுகளையும் ஆராயவேண்டும்.

-

இன்றைய தமிழகம் மட்டுமின்றி, இந்தியா ஆசியா கீழ்திசை முழுவதுமே இயலாய்வுத்துறையில் (விஞ்ஞானத்தில்) பிற்பட்டு விட்டோம், பிந்துற்றே கிடக்கிறோம் என்பதை யாவரும்

-