புதியதோர் உலகம் செய்வோம்
163
மொழியியல் (Linguisties) ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு, மூவகை ஆராய்ச்சிகளுக்கு வகை செய்தல் வேண்டும்.
முதலாவது நம் இலக்கண நூலின் பெருமைகளை ஆராய்ந்து, அது சென்ற ஈராயிர மூவாயிர ஆண்டுகளில் நீள அகலப் புதுமைகளில் வளர்ந்த வகைகளையும், உயர்ச்சி வகைகளில் தேய்ந்து தேய்ந்து வந்த வகையையும் வரலாறாகக் காண்டல் வேண்டும்.
ரண்டாவதாக,
உலகமொழிகளில் இலக்கணங் களினுடனும், இலக்கண முறை வரலாறுகளுடனும் தமிழ்மொழி இலக்கணத்தையும் இலக்கண அறிவு வளர்ச்சி தளர்ச்சி வரலாற்றையும் ஒப்பிட்டாய்ந்து, தமிழ் இலக்கணத்தின் தனிச் சிறப்புப் பண்புயர்வுடன், தனிச் சிறப்புப் பண்புக் கேடுகள் வகுத்துக் காணல் வேண்டும்.
மூன்றாவதாக, தொல்காப்பியத்தின் தனிப்
சிறப்புகளுடன்,
சமஸ்கிருதத்தில்
தனிப்பெருஞ் பிராதிசாக்கியங்கள், பாணினீயம் அணியலங்காரத்துறை விரிவு ஆகியவற்றின் தனிப்பெரும் சிறப்புகளும், இன்றைய மேலை மொழிகளின் இலக்கண,மொழிநூல், மொழியியல் சிறப்புக்களும் ஒருங்கமைய, காலத்துக்கேற்ற தமிழ்ப் பேரிலக்கணம் அமைக்க வேண்டும்.
இருபதாம் நூற்றாண்டின் தொல்காப்பியமாக அது அமைய முடியுமானால், ஒப்புயர்வற்ற அவரது இனிய, எளிய, நுண்ணிய மார்ந்த நுழைபுலத்திறம் வாய்ந்த சூத்திர நடையில் அது யாக்கப் பெற முடியுமானால், தமிழகம் இந்நூற்றாண்டிலும் வருங்கால உலகிற்குப் புது வழி காட்டமுடியும் என்பது ஒருதலை. ஆனால் அது உரைநடையில் அமைந்தால்கூட, மேலை நாடுகளுக்கு ஒப்பாகக் கீழை நாட்டைக் கொண்டு வரத்தக்க ஆசியாவின் முதல் முயற்சியாக அது அமையும் என்று உறுதியாகக் கூறலாம்.
தமிழ் இலக்கணம் பல வகைகளில் உலகின் எல்லா இலக்கணங்களையும்-சமஸ்கிருத இலக்கணத்தைக்கூடத் தாண்டி வளர்ந்துள்ளதாயினும், இன்றைய உலகில் பிற்பட்டுவிட்ட தென்பதில் ஐயமில்லை. ஏனெனில் எல்லாக் கீழை மொழி இலக்கணங்களையும் போலவே தமிழ் இலக்கணமும் விரிவுரை