பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30. தமிழ் இன விழா

கரும்பு தின்ன விரும்பு!

மஞ்சள் பூசி மகிழ்!

இஞ்சியில் கொஞ்சும் நலம்!

பொங்கல் விழா தமிழ் விழா. தமிழர் விழா, தமிழின விழா. தமிழ் என்றால் இனிமை, இதனைக் கரும்பும், சர்க்கரைப் பொங்கலும் குறிக்கும்.

தமிழன், வாழ்வைக் கண்டுபிடித்து, அதை ஒரு நூலியல் (விஞ்ஞானம்) ஆக, கலை ஆகு வளர்த்தவன். வாழ்வின் மறை திறவு காதல் எனக் கண்டு, அதனை அகம் ஆக்கி, அதன் அகம் புறம் ஆகிய பண்புகளையும் நூலாக, கலையாக, இலக்கியமாக வளர்த்தவன். அவன் வாழ்வில் பொலிவு, வளர்ச்சி அவாவினான். பொலிவு கண்டான், பொலிவு கண்டு வளர்த்தான். அப்பொலிவைக் குறிப்பது சுட்டிக்காட்டி விளக்குவது மஞ்சள்!

தமிழினம் வாழும் இனம் வாழ்ந்த இவைகளின் வரன்முறை வாழ்மரபாக, வாழும் இனங்களின் வருங்கால மரபு விதையாக, வாழ இருக்கும் இனங்களின் வேர் முதலாக, என்றும் நின்று வாழும் சாவா இனம், மூவா இனம். சாவா வாழ்வை, மூவா இளமையை நோக்கி மனித இனவாழ்வை வளர்க்கும் வழி கண்டவன் தமிழன், அதையே வாழ்வின் வாழ்விடை நலிவகற்றும் அருமருந்தாகக் கண்டு போற்றியவன்! இச்சாவா வாழ்வின் மூவா இளமையாகிய அருமருந்துப் பண்பினைச் சுட்டி உணர்த்துவதே இஞ்சி!

பொங்கல் விழாவைக் கரும்பு விழா என்றும் கூறலாம், மஞ்சள் விழா என்றும் கூறலாம், இஞ்சி விழா என்றும் கூறலாம். கரும்பு நாவுக்கினிமை.