பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

173

உலக மொழிகளின் சொற்களும் (ஆங்கிலம் ஜிஞ்ஜர்) எழுந்து இன்றும் வழங்குகின்றன.

இலவங்கம் என்ற மணப்பொருள் இன்றும் தென் கிழக்காசி யாவிலுள்ள இலவங்கத் தீவில் மட்டுமே விளைகிறது. மற்ற மணச்சுவைப் பொருள்களும் பொரும்பான்மையாக மலையாளக் கரை முதல் இலவங்கத் தீவு வரையிலுள்ள தென்கிழக்காசியப் பகுதிகளிலேயே விளைவாக்கப்படுகின்றன.

இவற்றை உலகெங்கும் தமிழ் வணிகர் நேரடியாகவும், தமிழினத்துடன் ஊடாடிய அராபியர், மலேசியர், இந்தோனேசியர் முதலிய பிற இனத்தவர் மூலமாகவும் கொண்டு பரப்பி, உலக நாகரிகத்தின் அகத்தைப் போலவே புறத்தையும் வளர்த்தனர்.

இந்தியா முழுவதும் அதற்கப்பாலும் மஞ்சள் நிறமே மங்கல நிறமாகக் கொள்ளப்படுகிறது. பெண்கள் வாழ்வின் சின்னமாக அணியும் குங்குமம் மஞ்சளின் திரிபேயாகும். குங்குமமும், குங்குமம் என்ற சொல்லும் பொட்டு (சமஸ்கிருதம் - திலகம்) இடும் நாகரிகமும் இந்தியா முழுவதும் பரவியுள்ளது.

புறத்தே பரவிய இப்பொங்கற் பண்புகள், அகத்தே பரவிய பலவற்றுக்கும் ஒரு புறச்சான்றேயாகும்.

திருமணம் என்பதற்குக் கிட்டத்தட்ட உலகின் எல்லா மொழிகளிலும் உள்ள சொற்களும் தமிழிலிருந்துதான் வந்தன என்று கருத இடமுண்டு. ஏனெனில் உலக ஆரிய மொழிகளில் திருமணம், கணவர் மனைவி, மாமன், மைத்துனன், மாமி, மைத்துனி முதலிய வற்றுக்கு இன்றும் ஆசியப் பொதுச் சொல் எதுவும் கிடையாது. ஊர், நாடு, தெரு என்பவற்றுக்குக் கூட அத்தகு பொதுச் சொற்கள் கிடையா. இது மட்டுமோ? தொலைதூர ஆங்கிலம் போன்ற மொழிகளில் திருமணத்திற்கு ன்று வழங்கும் (மாரேஜ், வெட்டிங் போன்ற) சொற்கள் கூட மரு(மணம்), வேட்டம் (தெலுங்கு - பெள்ளி, மலையாளம் -வேளி) ஆகிய சொற்களின் ஒலியும் பொருளும் பண்பும் உடையதாகவே திகழ்கின்றன என்பது கூர்ந்தாராயத்தக்கது.

தொல்காப்பியம் கூறும் அகப்பொருள் செய்திகள், திருவள்ளுவர் கூறும் அரசியல் செய்திகள் ஆகிய இலக்கணங்