பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




174

அப்பாத்துரையம் - 4

களுக்குரிய இலக்கியக் கூறுகளை நாம் இன்றும் ஆங்கிலேயர், செர்மானியர் ஆகியோர் வாழ்விலும் பண்பிலும் காணலாம்.

இன்று உலக மக்களில் பாதிப்பேர் புத்த சமயத்தினர்.

புத்த சமயத்தினை உலகெங்கும் பரப்ப, அசோகன் உதவிய அளவைவிடத் தமிழன் உதவிய அளவு சிறிதன்று, பெரிது. ஏனெனில், அசோகன் பரப்ப முயன்ற புத்த சமயம் பழய தென்கலை (ஹீனயான) புத்தம். ஆனால் இன்று கிழக்காசியா எங்கும் பரவிய புத்தம், தமிழகத்தில் புதிதாக வளர்ந்த வடகலை (மகாயான) புத்தம். அருகனின் பழய நெறி கூடத் தமிழக மூலமாகவே இலங்கை, பர்மா, இந்து, சீனா ஆகிய இடங்களில் பரவிற்று.

இன்றைய இசுலாமிய உலகில் ஒரு பெரும் பகுதியினர் மலேசிய இந்தோனேசியப் பகுதிகளில் வாழ்பவரே. அங்கெல்லாம் இசுலாத்தைக் கொண்டு பரப்பியவர்கள் தமிழர்களே.

இன்றைய உலக சமயங்கள் எல்லாமே உலக ஆரிய இனச் சூழலுக்கு வெளியேயிருந்து பிறந்தவை. அது மட்டுமன்று, எல்லாச் சமயங்களிலுமே தமிழ், தமிழன், தமிழினப் பொங்கல் பண்புகளின் கைவண்ணம் காணலாம்.

உலக வரலாற்றைத் தமிழறிஞர் ஊன்றிக் கவனித்தால், உலக அறிஞர் தமிழின வரலாற்றில் ஊன்றிக் கருத்துச் செலுத்தினால், ன் றைய உலக நாகரிக முழுவதும் தமிழ் நாகரிக மலர்ச்சியே, இன்றைய சமய, கலை, நூல், (விஞ்ஞான) வாழ்வு முழுவதும் தமிழ்ப் பொங்கல் மரபாகிய கதிரொளியின் விரிமலர்ச்சிப் பரப்பே என்று காணலாம்.

கரும்பு -அதன் வேர்ப் பண்பு, அகப்பண்பு.

மஞ்சள் - அதன் உடற்பண்பு, புறப்பண்பு.

இஞ்சி - அதன் உயிர்ப்பண்பு, மாளா மூவாப்பண்பு.

இஞ்சி - என்ற சொல், தமிழில் கோட்டை என்ற பொருளும்

உடையது.

இஞ்சி பண்பு, தமிழரின் ஆற்றற் பண்பு.