பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




178

அப்பாத்துரையம் - 4

பேரரசினையும், மாக்கடல்கள் கடந்த உலகளாவிய கடற்பெரும் பேரரசினையும், தமிழர், சங்க காலத்திலிருந்தே கனவு கண்டனர் - நனவாக்கவும் முற்பட்டனர்!

மூவரசரும் - சேரரும் பாண்டியரும் சோழரும் இமயத்தில் தங்கள் முத்தமிழ்க் கொடியையும் பொறித்த மரபு, தமிழரின் நிலப் பேரரசு எல்லைக் கனவுக்கு ஓரளவு நனவுக்கும் - சின்னம் ஆகும்; ஆனால், இதில் சோழருக்குத் தன்னந்தனிச் சிறப்புகள் பல உண்டு! சோழன், இமயத்தில் முத்தமிழரசர்

கரிகால கொடியையுமே பொறித்தான்!

இது மட்டுமன்று, இமயத்தின் இந்திய எல்லையில் - தென் பக்க உச்சியில் - கொடி பொறித்ததுடன் அமையாமல், அந்த இமயமலை கடந்து- அதன் வடபக்கத்தில், திபெத் பக்க எல்லையிலும் சென்று அவற்றைப் பொறித்தான்!

“செண்டால் மேருவை அடித்து - அதன் உச்சியைத் திருகிப் பிடரியிலேயே தமிழ்க் கொடிகள் பொறித்தான் கரிகாலன்” என்று று பண்டைத் தமிழ்க் காவியங்கள், ச்செயலைப் பாடுகின்றன!

தமிழரின் மற்றொரு நிலப்பேரரசின் எல்லைக் கனவை, இராமாயணக் கதை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. 'இலங்கையை வென்றாள வேண்டும்' என்ற தமிழரசர் கனவு ஆர்வமே இராமனின் இலங்கை வெற்றிக் கதையாக உருவெடுத் ததோ - என்று கருத இடமுண்டு; ஏனெனில், இந்த இராமன் மரபு தமிழகத்தில் வெறும் கதை மரபு அன்று தமிழக வரலாற்றில் அழியாது பொறிக்கப்பட்ட ஒரு மரபுச் சின்னம் ஆகும்.

-

ன்

சங்க காலத்திலிருந்தே இலங்கை வென்ற பாண்டிய சோழ அரசர்கள், தம்மைக் 'கலியுகராமன்' என்று பெருமையுட விருது சூட்டிக் குறித்துக் கொண்டனர்!

'இலங்கைக் கனவு அல்லது இராமன் கனவை நனவாக்கியதிலும், சோழருக்கு முதலிடம் உண்டு" என்னலாம்; ஏனெனில், ‘கரிகாலன் இலங்கையை வென்று - சிறைப்பட்ட பன்னீராயிரம் வீரர்களையும் காவிரிக்குக் கரை கட்டுவதில் ஈடுபடுத்தினான் என்று இலங்கை வரலாற்றேடாகிய ‘மகாவம்சம்’ கூறுகிறது!

>