பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

-

181

முதலாம் இராசராசன், தன் ஆட்சிக்காலக் கல்வெட்டுகளி ளெல்லாம் முகவுரையாக அரசனின் அந்தந்த ஆண்டு வரையுள்ள வெற்றிகள் சாதனைகளின் பட்டியலையே புலவர்கள்மூலம் 'மெய்ப் புகழ்ப் பாட்டாக்கிப் பொறிக்கச் செய்தான்; எல்லா அரசரும் இதனைப் பின்பற்றினர்; ஒவ்வொர் அரசன் மெய்க்கீர்த்திகளும், ஒரு தனிவாசகத்தை முதன்மையாகக் கொண்டு - அதனையே அவ்வரசனுக்குரிய முத்திரை வாசகமாக ஆக்கின!

கோயில்களும் - கல்வெட்டுகளும் வேறு எந்த நாட்டையும் விடச் சோழ நாட்டிலேயே மிகுதி; அதே சமயம், சோழர் கோவில்களும், கல்வெட்டுகளும், சோழநாட்டில் மட்டுமன்று - சோழர் ஆண்ட தமிழகப் பரப்பு முழுவதும் - அது தாண்டி உலகெங்கணும் கம்போடியா, ஜாவா, பிலிப்பைன் தீவுகள்வரை எங்கும் காணலாம் - காணப்பட்டு வருகின்றன!

கீர்த்தி விரும்பும் அரச மரபுகளிடையே, மெய்க்கீர்த்தியே விரும்பும் சோழ மரபு, ஒப்புயர்வற்ற அருமை பெருமை உடையதாகும். ஏனெனில், கீர்த்தியைப் புலவரைக் கொண்டு எவரும் எழுதிவிடலாம். அது புலவர் திறமைகாட்டும் கீர்த்தியாக மட்டுமே இருக்கும்.

வரலாற்றுக் கீர்த்தியாகிய மெய்க்கீர்த்தியைக் கல்வெட்டில் பதிக்க வேண்டுமானால், ஆட்சியிலும், நாடளாவிய நில அள வாய்வு ஏடு வகுக்கப்பட்டதனை வரலாறு காட்டுகிறது; அதைச் செய்து முடித்த நில அளவாய்வுத் துறையின் தலைமை அதிகாரி, உலகளந்த பெருமாள்' என்று விருதுபெற்று வரலாற்றிலேயே தன்புகழ் பொறித்துள்ளான்!

-

உலக

சங்க காலத்தில், தமிழரசர் பொதுவாக சேர அரசர் சிறப்பாக கடற்கொள்ளைக்காரர்களை அடக்கி, உலகக் கடல் வாணிபம் வளர்த்தனர்!

-

அதே பெருமையை இன்னும் விரிவாக, உலகக் கடல் வாணிக நெறிகளுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ஆற்றியவர்கள், சோழப் பெரும் பேரரசர்கள் ஆவர்!

இன்றைய உலகின் கடற்படை மரபு வரலாறு பணி முதல்வர் பயிற்சி மரபு (Civil Services or Administrative Services)