பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




XX

ஒருமொழிப் புலமை உறற்கே வாணாள் ஒழியுமெனில், இருமொழி யன்று, பன் மூன்று

மொழிகள் இருந்தகழ்ந்தே

திருமொழி எனநந் தீந்தமிழ்த்

தாயைத் தெரிந்துயர்த்திக்

கருவிழி போலும் கருதிய

கண்ணும் கவிழ்ந்ததுவே!

குமரிஆ ரல்வாய் குமிழ்த்தமுத்

தம்மைக்குக் காசிநாதர்

திமிரிப் பயந்தஅப் பாத்துரை

என்னும் திருவளர்ந்து

நிமிர்த்துத் தமிழ்மொழி நீணில

மெங்கும் நிலைப்படுத்தும் அமரிற் படுத்திங் கயர்ந்ததே ஆரினி ஆந்துணையே!

செந்தமிழ் ஆங்கிலம் இந்தி பிரெஞ்சு செருமனுடன் வந்தச மற்கிரு தம்ருசி

யம்சப்பான் என்றயல்சார்

முந்துபன் மூன்று மொழிபயின் றேபன் மொழிப்புலமை வெந்துநீ றானதே, தாய்ப்புலம் விம்ம வெறுமையுற்றே!

அப்பாத்துரையம்

-

4

- பாவலரேறு பெருஞ்சித்திரனார், கனிச்சாறு (பக். 158–59)