188
அப்பாத்துரையம் - 4
இந்தியாவில் வடபாலுள்ள இந்தி முதலிய மொழிகளின் நிலை இன்னும் சற்று மேம்பட்டது; அவை, அயலாட்சிக் காலத்திலேயே இலக்கியவளம் பெற்றன; ஆனால், தமக்கென எழுத்தில்லாவிட்டாலும், அயலாட்சிக்குமுன் நிலவிய பழைய ஆட்சி மொழிகளான பாரசிகம், சமக்கிருதம் ஆகிய மொழிகளின் எழுத்துக்களை மேற்கொண்டு, அவற்றின் இலக்கிய ஆட்சி மூலமே இலக்கிய வளம் பேணியும் வந்துள்ளன!
இம்மொழிகளுக்கு, கி. பி. 16-ஆம் நூற்றாண்டுக்கு முன் இலக்கிய வாழ்வு இருந்ததில்லை!
-
தென்னகத்தில், கன்னடம் - தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளின் நிலை, இன்னும் ஒருபடி மேம்பட்டது ஆகும். இம்மொழிகளுக்குத் தமக்கென எழுத்து இலக்கியம் உண்டு; ஆனால், அயலாட்சிக்கு முற்பட்ட மொழி ஆதிக்க நாட்களிலே அவை எழுத்து முறையிலும் - இலக்கியத்திலும் சமஸ்கிருதத்தை ஓரளவே பின்பற்றி, தம் தனி நிலை கெடாமல் வாழ்ந்து வந்துள்ளன!
தமிழ் மொழியின் நிலை, இந்த எல்லா மொழிகளையும் விட ஆதிக்க மொழிகளைவிடத் தனிச் சிறப்புடையதாகும்.
க
தமிழுக்குத் தொன்றுதொட்டே தமக்கென எழுத்தும் - இலக்கமும்- இலக்கியமும் உண்டு.
மொழி ஆதிக்கத்தாலும், அயலாட்சியாலும் பிற மொழிகளுக்கு ஏற்பட்ட தாக்குகளை தாழ்வுகளை அதுவும் ஏற்றாலும், அயலாட்சிக்கு முற்பட்ட மொழி ஆதிக்கத்துக்கு முற்பட்ட காலத்திலிருந்தே அது பெற்றிருந்த தன்னாட்சிப் பண்புகள் அதற்கு. தாழ்வு நிலையிலும் ஒரு தனித்தன்மை கொடுத்தே வந்துள்ளது.
அயலாட்சி மொழிகளாகிய ஆங்கிலம், பிரெஞ்சு முதலியவற்றுக்கும்,
அம்மொழிகளுக்கும்
ஆசிய மொழிகளுக்கும் முற்பட்ட பண்பாட்சி இலக்கிய ஆட்சி மொழிகளான இலத்தீன் கிரேக்கம் பாரசிகம் அரபு - சமக்கிருதம் ஆகியவற்றுக்கும் முற்பட்ட பழம் பண்பாட்டு மொழி தமிழ்!
அயலாட்சிகள் வருவதற்கு முன்பிருந்தே - அந்த அயல் மொழிகள் பிறப்பதற்கு முன்பிருந்தே, உலகத்தின் முதல் தாய்
உ