பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

189

மொழியாய் - முதல் இலக்கிய மொழியாய் - முதல் சமய மொழி அல்லது தெய்வமொழி அல்லது மந்திர மொழியாய் - முதல் அரசியல் அதாவது ஆட்சி மொழியாய் - முதல் அறிவு மொழி அல்லது விஞ்ஞான மொழியாய் - முதல் முதல் கல்லூரி, பல்கலைக் கழகங்கள் கண்ட முதல் கல்வி மொழியாய் - உலகின் முதல் உயர்தனிச் செம்மொழியாக மட்டுமன்றி, உலகின்வாழ் மொழிகளிடையே ஓர் உயர் தனிச் செம்மொழியாய் நிலவி வந்துள்ள மொழி தமிழ்!

இலத்தீனமும் - சமக்கிருதமும், உலகின் பண்பாதிக்க மொழிகளாய் இருந்த காலத்திலும் அதற்கு முன்பும், அந்த மொழிகளைவிட வளமுடைய இலக்கிய மொழியாய் இருந்ததனால்தான், தமிழ், சமக்கிருத மொழியை எதிர்த்து நிற்க வேண்டி வந்தது; ஏனெனில், சமக்கிருதம் உலகில் பெற்ற உயர்வு. தமிழினிடமிருந்து அது தட்டிப் பறித்த உயர்வே ஆகும்!

தமிழகம், இந்தியை எதிர்ப்பதன் காரணமும் இதுவே!

தமிழர், சமக்கிருதம் போல் -இந்தி போல் ஆதிக்கம் விரும்பாத காரணத்தினாலேயே, இந்தியாவில் தமிழ், சமக்கிருதத்தின் இடத்தையோ- இந்தியின் இடத்தையோ பெறாமல் இருக்கிறது!

தமிழர் முழுத் தன்னாட்சி பெறும் காலத்தில், இதுபோல அவர்கள் ஆங்கிலத்தையும் எதிர்க்காமல் இருக்க முடியாது; ஏனெனில், தமிழ்மொழி ஆங்கிலம் போல் ஆதிக்க மொழியாய் ல்லாத காரணத்தாலேயே, உலகில் அது, பெற்றுள்ள இடத்தைப் பெறாமல் இருக்கிறது!

ஆங்கிலம்

இந்தி எதிர்ப்பில் தமிழகம் தனி முதன்மை பெற்றதாய் இலங்குவதன் காரணங்கள் இவையே!

வடதிசை வாணர் சிலர் நாக்கில் நரம்பின்றிக் கூறுவது போல், இது, ஆங்கிலப் பாடத்தால் ஏற்பட்ட நிலையன்று!

இன்று இந்தியை எதிர்ப்பவர்கள், நேற்று சமக்கிருதத்தை எதிர்ப்பவர்களே - நாளை, ஆங்கிலத்தையும் எதிர்ப்பவர்களே ஆவர்!