புதியதோர் உலகம் செய்வோம்
-
193
வான்புகழ் அறிஞர் அண்ணாவால் ஆக்கப்பட்டு, டாக்டர் முதல்வர் கலைஞர் டாக்டர் நாவலர் ஆகியோர் உட்படத் திராவிட இயக்கத் தலைவர்கள் பலராலும் அடி நாளிலிருந்தே நடிக்கப்பட்டு வந்துள்ள 'சிவாஜி' ('சந்திரமோகன்') நாடகம் இதைக் குறித்துக் காட்டுகிறது.
சத்திரபதி சிவாஜி, மராத்திய வீரர் மட்டுமல்லர் - முழுநிறை இந்தியத் தேசியத்தைக் கனாக் கண்டு அதை நனவாக்க அடிகோலிய அனைத்திந்திய வீரர் அவர் என்பதைத் தமிழகமும் இந்தியாவும் உணர எடுத்துக் காட்டிய இயக்கம் திராவிடப் பேரியக்கமே என்பதை எவரும் எளிதில் மறந்துவிட முடியாது.
சிவாஜி மரபு பற்றிய மக்கட் பாடல்கள், எம்மொழியையும் விடத் தமிழிலேயே மிகுதி என்பதும் இங்கே குறிப்பிட வேண்டிய ஒரு செய்தியாகும்!
இந்தியாவின்
பெரும்பகுதியும், அயலவர்
படை
யெடுப்புக்கும் அயலாட்சிக் கொந்தளிப்புகளுக்கும் ஆட்பட்டு நிலைகுலைந்து - பண்பு குலைந்து வந்த காலத்தில்,அப்போக்குக்கு ஒரு கால அணையிட்டு, ஒரு மராத்திய அரசையன்று - மராத்தி நாடு, கன்னட தெலுங்கு நாடுகள், தமிழகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பேரரசை மட்டுமன்று ஒரு புதிய இந்தியத் - தேசியத்தை திட்டமிட்டு அடிகோலியவர் சிவாஜி!
மராத்திய வரலாற்றாசிரியர்கள் தை மட்டுமன்றி, மராத்தியப் பேரரசுக்கு வழிகாட்டியாய் இலங்கிய விசயநகரப் பேரரசு - அதற்கு வழிகாட்டியாய் அமைந்த சோழப் பேரரசு - ஆகியவற்றின் தொடர்புகளையும் நமக்கு விளக்கிக் காட்டியுள்ளனர்.
வரலாற்று ஆராய்ச்சித் துறையில் மட்டும் புதையுண்டு கிடக்கும் இந்தப் பேருண்மையை அரசியல் வாழ்வில் முதல் முதல் கண்ட பெருமகனார் வான்புகழ் அறிஞர் அண்ணா ஆவார்; அதை முதன் முதலாகத் தேசியக் கட்டமைப்பில் பயன்படுத்திய இயக்கம் அறிஞர் அண்ணாவையும் - அவர் சிவாஜி நாடகத்தில் பங்கேற்று முன்னோடும் பிள்ளையாய் வளர்ந்துள்ள டாக்டர் கலைஞரையும் தலைவர்களாகக் கொண்ட திராவிட இயக்கமே யாகும்.