புதியதோர் உலகம் செய்வோம்
195
பாடுபடுகிற இந்தியாவின் ஒரு பேரியக்கம் திராவிடப் பேரியக்கமே ஆகும்!
-
"திராவிட இயக்கத்தின் மூல முதல்வர் மூதாதை சேப்பாக்க முனிவர்" என்று தென்னகமெங்கும் புகழ் நாட்டியவர் டாக்டர் சி.நடேசனார் ஆவர்!
மாநகராட்சி உறுப்பினர் பதவிக்குமேல் என்றும் நாடாத அப்பெரியாருக்காக நடைபெற்ற மாநகராட்சித் தேர்தல் கூட்ட மொன்றை அந்நாளில் சென்னையில் காந்தியடிகள் காண நேர்ந்தது; இந்தியாவில் வேறெங்கும் எளிதில் காணக் கிடையாத காட்சி ஒன்றை மகாத்மா காந்தி அப்போது கண்டார்!
-
'பிராமணரல்லாதார் கட்சி' என்று அன்று கூறப்பட்ட ஒரு கட்சியின் சார்பில் நடந்த சிறு தேர்தல் ஒன்றுக்கான அக்கூட்டத்தில், நாமமிட்டவர்கள் தாழ்வடம் அணிந்தவர்கள்- வைதிகர்கள் - தாழ்த்தப்பட்டவர்கள் - சரிகைத் தலைப்பாகைகள்- கோவணாண்டிகள்-முசல்மான்கள்-கிறித்தவர்கள் ஆகிய எல்லா வகுப்பினரும் எல்லா திறந்தவரும் மைல் கணக்காகச் சென்றதைக் கண்ட விடுதலைத் தந்தையார், அதனை வியந்து பாராட்டினார் - இந்தியாவில் ஒரு சிறிய இந்தியாவாகிய இந்த ஊர்வலம், அம்மகான் கனவு கண்ட இந்தியாவின் ஒரு முத்தொளிச் சுடராக அமைந்தது!
சத்திரபதி சிவாஜி, புதிய இந்தியத் தேசியத்துக்குத் தமிழகத்தையே ஒரு கலங்கரை விளக்கமாகக் கண்டதுபோல, மகாத்மா காந்தியடிகளும், தாம் கனாக்கண்ட சுயராஜ்யத்துக்குத் தமிழ் தமிழக - தமிழ்ப் பண்பையே கலங்கரை விளக்கமாகக்
கண்டார்!
-
உண்மையான சுயராஜ்யத்தை ராம ராஜ்யத்தை தெய்வீகப் பேரரசை அவர், உபநிடதங்களிலும், பகவத் கீதையிலும் கண்டது போலவே, விவிலியத் திருமுறையில் திருக்குரான் என்னும் அருமறையில் - கபீர்தாசரின் கீதங்களில் நாடியது போலவே, தமிழரின் உலகத் திருமறையாம் திருக்குறளிலும், ஆழ்வார்கள் - நாயன்மார்கள் பாசுரங்களிலும்
கண்டார்!