196
அப்பாத்துரையம் - 4
-
மதுவிலக்கிலும், தாழ்த்தப்பட்டவர் பிற்பட்டவர் முன்னேற்றம், கிராம முன்னேற்றம் ஆகிய பல்வேறு துறைகளிலும் காந்திய மரபை இன்றும் விடாது பின்பற்றுவது தமிழக அரசே என்பதை, இந்தியாவெங்கும் மனமாரப் புகழ்கிறது!
-
-
காந்திய மரபு வழுவாது காந்திய நெறி வளர்க்கும் இயக்கம், தென்னகக் காந்தியாம் வான்புகழ் அறிஞர் டாக்டர் அண்ணா வழிவந்த இயக்கமாம் திராவிட இயக்கமேயாகும். இது, தற்செயலாக நடைபெறும் ஒரு புது மரபன்று தமிழகமும் திராவிட இயக்கமும்; காந்தியடிகள் போற்றிய திருக்குறள் மரபு வழிவந்த நாடு திருவள்ளுவ மரபில் வந்த இயக்கம் என்பதனாலேயே ஆகும்.
-
இந்தியாவில் மட்டுமன்று - உலகிலேயே, இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னிருந்தே தமிழ் மொழியில் காந்திய மரபு, திருவள்ளுவ மரபாக சங்க இலக்கிய மரபாக - ஆழ்வார்கள், நாயன்மார்கள் மரபாகத் தொன்றுதொட்டே மலர்ந்துவரும் மரபாகும்!
கழகக்குரல் 4-1-1976