புதியதோர் உலகம் செய்வோம்
தூய
தெலுங்கிலோ
199
அல்லது ஆங்கிலத்திலோ
அம்மொழியைச் சேர்ந்த புலவர்கள் பேசினால், அந்நாட்டுப் பாமர, பொதுமக்கள் அதைப் புரிந்துகொள்ள முடியாது; ஏனெனில், அந்நாடுகளில் இடத்திற்கு இடம் பேச்சு நடைமிகுந்த அளவு மாறுபடுகிறது.
ஆனால் அவ்வளவு மாறுபாடும் வேறுபாடும் தமிழ் மொழியில் இல்லை; அதனால்தான் சொல்கிறேன் 'புலவர்களின் தமிழ் நடையை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும்' என்று!
இதை மறுப்பவர்கள் எவராயினும் அவர்கள், குறிப்பிட்ட ஒருவரை வேண்டாம் என்று சொல்வதற்குப்பதில், அவருடைய நடை புரியாதது என்று சொல்லி அவரைத் தட்டிக்கழிக்கப் பேசுகிறார்கள் - என என்னால் நிரூபிக்க முடியும்.
எப்படியெனில், திரு. வி. க. அவர்களின் தனித்தமிழ் நடையை அக்காலத் தொழிலாளர் உலகமும், பொதுமக்களும் எவ்வாறு புரிந்து கொண்டு அவர் சொல்லிய கருத்தைத் தெரிந்துகொண்டு செயலாற்றியதோ, அவ்வண்ணமே முன்பைவிட இப்பொழுது தமிழறிவு ஓரளவு அதிகம் பெற்றுள்ள தமிழ்மக்கள், புலவர் நடையைப் புரிந்துகொள்ள இயலும் என்று யான் நிறுவுகின்றேன். மக்கள் அந்த அளவுக்குத் தமிழ்ப் புலமை அடைவதற்கு மக்கள் தம் தாய்மொழிப் புலமையை அறிந்து அதற்கொப்ப இலக்கிய நடையினைக் கொண்டுள்ள எழுத்தோவியங்கள் தேவை.
இன்றைய உலகில், இரஷ்ய நாட்டில் வாழும் சாதாரண வண்டி ஓட்டும் வேலைசெய்யும் தொழிலாளி, அம்மொழியில் இயற்றப்பட்ட டால்ஸ்டாய் அவர்களின் இலக்கிய நடையைப் புரிந்து கொள்கிறான்; படித்து இன்புறுகிறான்.
ய
-
இத்தகு நிலை தமிழகத்தில் ஏற்பட வேண்டுமென்று கனவு கண்டு அப்போதே தொழிலாளர்களிடையே செந்தமிழில் தூய தமிழில் பேசிவைத்தார் திரு. வி. க. அவர்கள்; நவசக்தி, தேசபக்தன் போன்ற தமிழ் இதழ்களைத் தனித் தமிழில் நடத்தி வாகை சூடியவர்; அவர் நடத்திவந்த அத்தகு தொண்டுகளை நாம் பரக்க ஆற்றி வந்தால் விரைவில் இலக்கிய நடையை எல்லாத் தமிழ் மக்களும் புரிந்து கொள்ள முடியும்!