பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




204

அப்பாத்துரையம் - 4

அணிமை எல்லையிலேயே அது. நன்செய் வளமாகப் பரவி இந்திய மாநிலம் முழுவதிலும் தேசிய வாழ்வாகப் பொங்கிப் பொதுளுவது ஆகும்; பொங்கிப் பொலிவுற்று வருவது ஆகும்.

இன்று நாம், 'இந்தியத் தேசியம்' - 'பாரதத் தேசிய வாழ்வு’ என்று பெயரிட்டு அழைக்கும் பேருலகப் பண்பாடு, இந்தத் தமிழ்ப் பண்பாடுக் கழனியில் பயிராகி - ‘இந்தியா' என்ற பெரும்பண்ணையில் அறுத்தடித்து - பாரதப் பெருங்களத்தின் வளமாகப் பொலிவு காண்பதே ஆகும்!

இது மட்டுமோ! உலகெங்கணும் பிற்பட்ட இனங்களை உயர்த்தி - இன வேறுபாடுகளைக் களையத் தகும் ஆற்றலுடைய ஒரே பண்பாடு, மொழி-இன-சமய நிற வேறுபாடுகள் கடந்த ஓருலகப் பண்பாட்டை ஆக்கிப்படைக்கவல்ல ஒரே பேரியக்கம், தமிழ்ப் பேரியக்கமே ஆகும்.

-

4

இந்தியாவின் வரலாறு - உலக வரலாறு மனித இன நாகரிக வரலாறு ஆகிய வை, விஞ்ஞான முறையாக ஆய்ந்துணர்ந்து எழுதப்படும் காலத்தில், 'தமிழியக்கமே இந்தியத் தேசிய வாழ்வு' என்பதும் அதன் கடல்வழி விரிவே தென்கிழக்காசியர் உட்பட்ட பண்டை உலக நாகரிகம் என்பதும்- கால, இட, எல்லை தாண்டிய அதன் மலர்ச்சியே இன்றைய மனித இன நாகரிகம் என்பதும் வெள்ளிடை மலையாக விளங்கத்தக்கதாகும்.

-

இந்த மெய்ம்மைகளை அறிவுலகம் ஆராய்ந்து ஆராய்ந்து மெல்ல மெல்லக் கண்டு வருகிறது; முழுவதும் காணும் நாள் தொலைவில் இல்லை; ஆயினும், உலகம் அதைக் காணும்வரை, தமிழன் தூங்கிக் கொண்டிருக்கலாமா?

வழக்கு மன்றத்திலே - வழக்கு வெற்றியடையும் வரை, அவ் வழக்குக்குரிய செல்வத்தை அழியாது நாம் பாதுகாக்க வேண்டாமா? சித்திரம் விளங்கும் வரை சுவர் சுவர் இருக்க

வேண்டாமா?

தமிழர் எல்லாரும் இவற்றை அறியவேண்டும்; விரைவில் அறியவேண்டும்; இவ்வறிவு, விளக்கத்துக்குரிய பல்வேறு ஆராய்ச்சிகளை தமிழ் ஆராய்ச்சிகளை உலக மொழி ஆராய்ச்சிகளைத் தமிழரும், தமிழகத் தலைவர்களும், தமிழக

-