பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6.

7.

8.

9.

xxii

10.

-

அப்பாத்துரையம் 4

நூல்கள், நாடகம், பொது அறிவு நூல், அகராதி, உரைநூல், குழந்தை இலக்கிய நூல் என பல்வேறு களங்களிலும் தனி முத்திரைப் பதித்தார். 'இந்தியாவின் மொழிச்சிக்கல்' என்ற நூலைப் படைத்தார். சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதித் தயாரிப்பில் 1959முதல் 1965 வரை அதன் ஆசிரியராகச் செயல்பட்டார்.

-

தமிழ் இலக்கியம், தமிழக வரலாறு குறித்த ஆராய்ச்சி களில் கண்டறிந்தவற்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆராய்ச்சி நூல்களாக எழுதினார். இவற்றில் குமுரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு' மற்றும் 'தென்னாட்டுப் போர்க்களங்கள்' ஆகிய நூல்கள் சிறந்த படைப்புகளாகப் போற்றப்பட்டன.

'சரித்திரம் பேசகிறது' 'சென்னை வரலாறு', 'கொங்குத் தமிழக வரலாறு', 'திராவிடப் பண்பு', 'திராவிட நாகரிகம்' உள்ளிட்ட வரலாற்று நூல்கள், 'கிருஷ்ண தேவராயர்', 'நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்', 'சங்க காலப் புலவர் வரலாறு' உள்ளிட்ட வாழ்க்கை வரலாற்று நூல்களையும் படைத்தார்.

,

அலெக்சாண்டர், சந்திரகுப்தர், சாணக்கியர் உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், 6 தொகுதிகளாக வெளிவந்த திருக்குறள் மணி விளக்க உரை உள்ளிட்ட இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை. திருக்குறளுக்கு விரிவுரையும் விளக்க உரையும் பல ஆயிரம் பக்கங்களில் வழங்கியுள்ளார்.

‘உலக இலக்கியங்கள்' என்ற தனது நூலில் பாரசீகம், உருது, பிரெஞ்சு, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளின் இலக்கியங்களை ஆராய்ந்து பல அரிய செய்திகளை வழங்கியுள்ளார். உலகின் ஆதி மொழி தமிழ் என்றம், உலகின் முன்னோடி இனம் தமிழ் இனம் என்று அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து தனது கருத்தை வெளியிட்டார்.

அறிவுச் சுரங்கம், தென்மொழித தேர்ந்தவர், சிறந்த சிந்தனையாளர், சிறந்த சொற்பொழிவாளர், கனிந்து முதிர்ந்து பழுத்த பேரறிவாளர் என்றெல்லாம் போற்றப்பட்ட பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை 1989ஆம் ஆண்டு 82ஆவது வயதில் மறைந்தார்.