பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

205

இந்திய அறிஞர்களும், நிறுவனங்களும், தமிழக - இந்திய அரசுகளும் ஊக்கி வளர்த்தல் வேண்டும்; ஏனெனில், அப்போதுதான், உலகம் இவ்வுண்மைகளைக் காணும் நாளில், தமிழனும் தமிழக அறிஞர்களும் தலையைத் தொங்கவிடும் நிலையைத் தவிர்க்க முடியும்! அத்துடன், அப்போதுதான், உலகம் இதனைக் கண்டறியும் நாளையும், நாம் விரைவுபடுத்தியவர்கள் ஆவோம்!

-

இம்மெய்ம்மைகளை

இவற்றுக்குரிய ஆராய்ச்சிக்

கூறுகளைக் கோடிட்டுக் காட்டுவதே இத்தொடர் கட்டுரையின் நோக்கம் ஆகும்.

தமிழகத்திலே தமிழ் பற்றித் தமிழ்ப்புலவர் மட்டுமே - தமிழாசிரியர், இருந்துவிடுவது தவறு - பெருந்தவறு; ஏனெனில், தமிழ் என்பது, ஒரு மொழி மட்டுமன்று - இலக்கியவளமுடைய ஒரு மொழி மட்டுமன்று அதுவே, தமிழர் வாழ்வின் பண்பாட்டின் உயிர்நாடியாகும்!

-

தமிழகத்திலுள்ளவர்கள் எத்தொழிலினராயினும்

-

எவ்வகுப்பினராயினும் எச்சமயத்தினராயினும் எக்கட்சியினராயினும் - எம்மொழி கற்றவராயினும் - எந்நாட்டு வாழ்வில் பங்கு பெற்று அதில் ஈடுபாடு கொண்டவராயினும் - இந்தத் தமிழ் இயக்கத்தையே தம் உயிர் மூச்சாகக்கொண்டு, அதை வளர்க்கக் கடமைப்பட்டவர்கள் ஆவர்!

-

இங்ஙனம் செய்யாவிட்டால், தமிழக வாழ்வு மட்டுமன்று - அதைச் சூழ்ந்துள்ள தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, குடகு முதலிய தமிழின மொழிகள் வாழ்வும் - இவற்றின் மலர்ச்சியையே சார்ந்து வாழ்வு பெற்று வாழ்கின்ற வங்காளம் - குசராத்தி - மராத்தி போன்ற ஏனைய இந்திய மொழிகளின் வாழ்வுகளும், தமிழகம் அளாவிய சிங்களம் - பர்மா - மலாய் - இந்தோனேசியம் முதலிய ஆசிய மொழி வாழ்வுகளும், அகில உலக வாழ்வும் தேய்வுற்று மறுகுவதற்கே - அடையவேண்டிய முழு வளர்ச்சியை அடையாமல் தடைவுறுவதற்கே

இடமேற்பட்டுவிடும்!

இது, வெறும் கற்பனை மொழி அழகுச் சொல்லணியன்று; உயர்வு நவிற்சியுரையன்று; வரலாறு காட்டும் உண்மையேயாகும்;