206
-
அப்பாத்துரையம் - 4
ஏனெனில், தமிழ் மூவரசர், தமிழகமும் - இந்திய மாநிலமும் - கடலகமும் கடல் கடந்த பல நாடுகளும் நாகரிகம் பரப்பி ஆண்ட காலங்களில்தான், ஆந்திரப் பேரரசரும் கடல்கடந்து வாணிகமும் ஆட்சியும் பரப்பிப் பெருவாழ்வு கண்டனர்!
இன்றைய கேரளத்தின் பண்டைப் பேரரசரான சேர வேந்தர், 'தம் கடலில் பிறர்கலம் செல்லாதவாறு காத்து அலைகடலாண்ட காலமும் இதுவேயாகும்!
அந்நாளில்தான் இந்தியா, உலகின் மணிமுடியாய் - உபநிடத ஞானமும், புத்த நெறியும், சமண நெறியும் அகில உலகமெங்கும் ஒளியாகப் பரப்பி - உலகின் அறிவு ஞாயிறாக விளங்கிற்று!
இதுமட்டுமோ? இந்நாட்களில்தான், ஆசியாவும் ஆப்பிரிக்காவும், உலக நாகரிகத்தின் - உலக சமயங்களின் உலகக்கலை இயற் பண் பாடுகளின் பிறப்பிடங்களாகவும், வளர்ப்பிடங்களாகவும் விளங்கின!
தமிழகத்தில் என்றைக்குத் தன்மொழியாட்சியும் -பண்பாட்சியும் தளர்வுறப் பெறத் தொடங்கிற்றோ, அன்றையிலிருந்துதான்இந்தி யாவும் தாழ்வுறத் தொடங்கிற்று!
அன்றையிலிருந்துதான், ஆசியாவும் - ஆப்பிரிக்காவும், தம் பெருமையும் - தம் ஆட்சியும் இழந்து, புத்தம் புதிதாகத் தோன்றிய -அயலக நாகரிகங்களுக்கு அடிமைப்பட்டு, அவற்றின் வேட்டைக்காடுகளாக மாறி வந்துள்ளன! மாறி, இன்னும் அவதியுற்றுவருகின்றன!
-
-
-
-
புதிய தமிழகம் - புதிய இந்தியா - புதிய ஆசியா, ஆப்பிரிக்க உலகம் அமைய, வகுப்பு வேறுபாடற்ற இன வேறுபாடும், நிற வேறுபாடும் அற்ற - சுரண்டலும் தொழிலில்லாமையுமற்ற ஒரு வளமான ஓருலகப் பெரு நாகரிகத்தை அவாவி, அதற்காகப் பாடுபட விரும்புபவர்கள் அனைவரும், ஐயாயிரம் அல்லது ஆறாயிரம் ஆண்டுகளாக அந்த அவாவை வளர்த்து அதையே ஒரு கனவுத் திட்டமாகப் பேணிவரும் தமிழிலக்கியத்தை - தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தை ஆராய்ந்து காணவும், அவ்வியக்கத்தின் கண்கண்ட கற்பனைத் தருவாக விளங்கும் திராவிட இயக்கத்தைக் கண்ணெனக் காத்து மலர்விக்கவும் முன்வருதல் வேண்டும்!