புதியதோர் உலகம் செய்வோம்
207
தமிழ் என்றும், தமிழ் வீரம் - தமிழ்க் காதல் - தமிழ்ப் பண்பு என்றும், தமிழ் இலக்கிய ஏடுகளெல்லாம் விரித்து விளக்கிப் பராவ என்று தயங்கியதில்லை; ஆனால், காப்பியங்கள் தொடங்கும்போது அவர்கள், தம் குறிக்கோளாகக் கொண்டது 'உலகு' என்பதே!
-
தமிழும் தமிழ்ப் பண்பாடும், தமிழர் சிறப்புற வளர்க்க வேண்டிய ஒன்றாயினும், அது வளர்வது தமிழுக்காக மட்டுமன்று - மனித இனத்துக்காக - உலகுக்காக என்றே தமிழ் முன்னோர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திப் பறைசாற்றி வந்துள்ளனர்.
க
'உலகு ஆதிபகவன் முதற்றே; ஆதிபகவன் முப்பால் முதற்றே; முப்பால் நெறி தமிழ் முதற்றே' என்றுதான் உலக வேதமாம் தம் தமிழ் மறையைத் தொடங்குகிறார் - திருவள்ளுவர்.
‘உலகம் உவப்ப' என்று தொடங்கினார் - 'முருகு வேதம்’ எனப் புகழ்படத்தக்க தெய்வத் திருமுருகாற்றுப்படை வகுத்தளித்த தமிழ்ப் புலவர் திலகமான நக்கீரதேவர்!
'உலகெலாம்' என்றே, தம் பத்திப் பெருங்காவியம் தொடங்கினார் - சேக்கிழார்!
'உலகம் யாவையும்' என்று தொடங்கினார் தமிழகத்தின் இந்தியத் தேசியக் கவிஞரான கம்பநாடர்!
'உலகம்' என்று சொல்வதுடன் அமையாமல் முப்பால் முதல்வர், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்றும், சங்கப் புலவோர், தமிழ் ஆகம முதல்வரான திருமூலர் ஆகியோர் 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்றும், சங்க சான்றோர், யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றும் ஓருலகத் தத்துவத்தையே விளக்கி உலகுக்கு வழங்கியுள்ளனர்!
-
கொல்லன் தெருவில் பிறந்து வளர்ந்தும், அதை மறந்து, கோணிதைப்பவர்களிடம் சென்று, ஊசிக்கு இரந்து திரிபவர்போல, ஓருலகப் பண்பாட்டை இவ்வாறு பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே திட்டமிட்டு உலகுக்கு அளித்த தமிழன் மரபில் வந்த மாந்தர் சிலர், ஒற்றுமை - ஒருமைப் பாட்டிற்கு எங்கெங்கோ சென்று, போலி வாதங்கள் பேசி, அலைந்து திரிகின்றனர்!