பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(208

அப்பாத்துரையம் - 4

பிள்ளைக்கு உணவு ஊட்டவேண்டிய தாய், பிள்ளை யிடமும் பிள்ளையின் பிள்ளையிடமுமா பண்டங்களைத் தட்டிப்பறித்து வாழ முனைய வேண்டும்?

தமிழா! உன்

எழுவாய், விழித்தெழுவாய் அடிமைத்தளைகளை நீயே விலக்கி, இந்தியாவில் - ஆசிய - ஆப்பிரிக்க உலகில் - அகப்பேருலகில் இன்னும் இருந்துவரும் ஆன்மீக அடிமைத் தளைகளைத் தூக்கி எறிந்து, உண்மையான ஒருலகம் வளர்க்க எழுவாய்!

அதற்குரிய ஆயுதம் - தமிழியக்கம்! அதற்குரிய ஆற்றல்சால் மந்திரம் - மனித இனவேதமான திருக்குறள்!

வை

இருக்கின்றன!

இரண்டும் உன்னருகிலேயே, உன்னிடமே

மனித உலகத்துக்கே பயன்பட வேண்டிய இந்த இரண்டு கருவூலங்களையும், உலகுக்குப் பயன்படாமல் -உனக்கும் பயன்படாமல் கட்டி வைத்துக்கொண்டு தூங்குவது, மடமையிலும் மன்னிக்க முடியாத மடமையாகுமன்றோ! அத்தூக்கம் தவிர்த்தெழுவாய்!

உன்கையிலுள்ள, தமிழியக்கம் என்னும் அந்த ஆயுதத்தைத் தீட்டி - உன் வசமிருக்கும் ‘திருக்குறள்' என்னும் அந்த ஆற்றல் சான்ற மந்திரப்பண்ணை மீட்டி - அகில உலகுக்குப் பணியாற்றும் படி உன் தாயகத்தை, அதன் அறிவுத் துயிலினின்றும் எழுப்பும் திருப்பள்ளியெழுச்சி பாட முன் வருவாயாக!

(கழகக்குரல் - 11.8.1974)