பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

211

தமிழ் இயக்கம் உலகிலேயே மிக மிகப் பழமையான இயக்கம் ஆகும். தமிழ் எவ்வளவு பழமையானதோ, அவ்வளவு பழமை யானது, அது!

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அது தானும் வளர்ந்து தமிழ் இலக்கியத்தையும், கிரேக்க இலக்கியம் போன்ற பண்டைப் பேருலக வளர்த்து-இரண்டாயிரம் ஆண்டுக்காலமாக சமக்கிருத இலக்கியத்தையும், ஆயிரம் ஆண்டுக்காலமாக இந்தி யாவின் தாய்மொழி இலக்கியங்களையும் தூண்டி இயக்கி வளர்த்து வந்திருக்கிறது! ஆயினும், காலத் தளர்ச்சி காரணமாக, தமிழக வாழ்வில் தோன்றி வளர்ந்துள்ள சில அகப்பகை நோய்களின் காரணமாகவும் அந்நோய்களை வளரச் செய்துள்ள சில புறப்பகையாட்சிகளின் காரணமாகவும், கி.பி 16 நூற்றாண்டிலிருந்து தமிழ், தன் உலகளாவிய

-

-

இந்திய மாநிலமளாவிய ஒளியிற் சுருங்கி - மொழி இயக்க அளவில்கூடத் தள்ளாடித் தடுமாறித் தடம் மாறி வந்துள்ளது!

இந்த நிலையை மாற்றி - பழம்பெருமைகளை மீட்டும் உயிர்ப்பிக்க வந்துள்ள அமுதப் பேரியக்கமே திராவிட இயக்கம்!

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து, தமிழன் தமிழர் வாழ்வின் நோய் அகற்றும் அருமருந்தாய், மேலையுலகத்திலிருந்து வந்த புத்தொளி அறிஞர்களான நல்லாயர் கால்டுவெல் பெருமானார், போப்பையர் பிரான். உலகப் பேரறிஞர் ஆல்பெர்ட் சுவைட்சர். திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராக இருந்த மனோன்மணீய ஆசிரியர் சுந்தரம் பிள்ளை, திராவிடப் பேரறிஞர் பெருமான் L டாக்டர் சி. ஏ. நடேசனார், தனித்தமிழ் இயக்கத்தின் முடிசூடா மன்னராகிய ஆசிரியர் மறைத்திரு மறைமலையடிகளார் முதலியோரின் அறிவுக் கலை ஆய்வுப் பணிகளின் பயனாகவும், டாக்டர் நடேசனாரின் திராவிட சங்க மரபில் வந்த நீதிக் கட்சி- தன்மான இயக்கம் - திராவிட கழகம் - திராவிட முன்னேற்றக் கழகம் ஆசிய சமுதாய - அரசியல் - ஆட்சி இயக்கங்களின் விளைவாகவும் வளர்ந்து, தமிழகத்தின் நிறைபேரியக்கமாய், தமிழகம் கடந்து தென்னகமும்- இந்தியாவும் - தமிழுலகும் ததும்பி மேலிடக் காத்திருக்கும் தெய்வீகத் தமிழ்ப் புத்தியக்கமே திராவிடப் பேரியக்கம்!