பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(212)

அப்பாத்துரையம் – 4

இத்திராவிட இயக்கத்தை மேலீடாகக் காண்பவர்களின் பார்வைக்கு இக்கால உலகிலுள்ள பல்வேறு இயக்கங்களைப் போல, ஒரு புதிய இயக்கமாகத் தோற்றினாலும், உண்மையில் இது, உலக நாகரிகத்தின் வேர் முதலாக விளங்கிய தமிழ் இயக்கத்தையே, தன் வேர் முதலாகக் கொண்டு அதை ஒரு புதிய தென்னக இயக்கமாக - புதிய இந்திய தேசியமாக - புதியதோர் ஆசிய - ஆப்பிரிக்க அமெரிக்க -தென் கிழக்காசிய இயக்கமாக- புத்துலகை ஆக்க விருக்கும் ஓர் எழில்வானின் எழுஞாயிற்றியக்க மாக ஆக்கிவருவதாகும்.

-

தாயைத் தாயாகக் கருதாமல் பெண்ணாகக் கருதிவிடும் காமுகர்களைப்போல் - உலகுக்கே உரிய திருக்குறளைச் சாதி சமயச் சழக்கர்கள் கையிலுள்ள ஒரு நாட்டுக்கு மட்டுமே உரியதாகக் கருதிவிடும் சிறுமதியாளர்களைப்போல் தமிழுலகின் புத்தெழுச்சி இயக்கமான இந்தத் திராவிட இயக்கத்தை, மற்றத் தமிழகக் கட்சிகளோடொத்த ஒரு நாட்டுக் கட்சியாக மட்டிலுமோ, மற்ற இந்தியாவின் இயக்கங்களைப் போல ஓர் இந்திய இயக்கமாக மட்டிலுமோ எந்தத் தமிழரும் கருதிவிடுதல் கூடாது!

திருக்குறள், தமிழில் இயற்றப்பட்டிருக்கும் ஒரே காரணத்தால், தமிழர் அதைப் பேணி உலகுக்கு அளிக்க டிருப்பதுபோல, இந்தத் திராவிட இயக்கமும் தமிழகத்தில் வேரூன்றி - இதுகாறும் தமிழராலேயே பெரும்பாலும் வளர்க்கப்பட்டுள்ளது என்ற ஒரே காரணத்துக்காக, அதை எவரும் தமிழகத்துக்கு மட்டுமே உரியதாகக் கருதிவிடமுடியாது!

ஏனெனில், இன்றே திராவிட இயக்கத்தின் விழுதுகள் கேரளத்திலும், ஆந்திரத்திலும், கருநாடகத்திலும், உத்தரப் பிரதேசத்திலும் பரவத் தொடங்கியுள்ள என்பதைத் தமிழர் அறிவர்!

தமிழர் முயன்றால், அது இந்தியா முழுவதும் - தென் கிழக்காசியா முழுவதும் - உலகம் முழுவதும் பரவக்கூடியதே ஆகும்!

-

தமிழின் திராவிடத்தின் இந்த ஆற்றலை உணர வேண்டுமானால், 'திராவிடம்' என்ற சொல்லின் ஆழ்பொருளை ஆய்ந்துணர வேண்டும்.