பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இ. தேசியங்கடந்த தேசியம் - முழுநிறை முத்திறத் தேசியம்

தமிழ் தவிர - உலகில் வேறு எந்த மொழிக்கும், ‘கன்னித் தாய்' என்ற பெயர் மரபு கிடையாது!

-

தமிழ் தவிர வேறு எந்தப் பழமை வாய்ந்த உலக மொழிக்கும் சங்க மரபு இருந்ததில்லை!

தமிழ் தவிர - வேறு எந்த உலக மொழிக்கும் ‘முத்தமிழ்’ என்ற மரபு வகுக்கப்பட்டிருக்கவில்லை!

தமிழின் சிறப்பு அடைமொழிகள், இந்த தனிப்பழஞ் சிறப்புக்களைக் குறித்தெழுந்த பழமை சான்ற வழக்குகள் ஆகும்!

-

அசோகன் காலத்துக்கு முன்னிருந்தே இன்று வரை டையறாது வாழும் ஒரே இந்திய மொழி ஒரே இந்திய இலக்கிய மொழி தமிழ் என்பதனையும் வரலாற்று விளக்கப்பட ஏடு காட்டுவதாகும்!

"முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருள் பின்னைப் புதுமைக்கும் புதுமையாம் பெற்றியது!”

இவ்வாறு கடவுளை மட்டும்தான் உலகில் எல்லா நாட்ட வரும் வாழ்த்துவார்கள்.

ஆனால், பாரதப் பெருநாட்டவர் மட்டும், இதே சிறப்பினைக் கடவுளுக்கும் - தங்கள் பாரத அன்னைக்கும் ஒருங்கே வழங்கி, வாழ்த்திடக் காண்கிறோம்.

தமிழரோ - இன்னும் ஒரு படி மேற்சென்று, கடவுளையும் - தங்கள் தாய்த் திருநாட்டையும், தங்கள் கன்னித் தாய்மொழியாம் தமிழ் அன்னையையும் ஒருநிலையில் வைத்துப் பாடி வாழ்த்த முடியும் வாழ்த்தி வந்துள்ளார்கள் வாழ்த்தி வருகிறார்கள்!

-

-