பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(218)

அப்பாத்துரையம் - 4

ஆம்; வேதாந்த விழுச்செல்வரும் - நாடகப் பெருங்கவிஞரும் திராவிடப் பேரியக்கத்தின் விடிவெள்ளியுமான மனோன்மணீயம் பெ. சுந்தரனாரின் தமிழ் மொழி வாழ்த்து, தமிழர் கடவுள் வாழ்த்தாக மட்டுமன்றி - தமிழரின் நாட்டு வாழ்த்தாகவும், தமிழரின் மொழி வாழ்த்தாகவும் அமைந்து - தமிழர்தம் முத்திறத் தேசீயப் பாடலாக விளங்குகிறது!

பல்லுயிரும் பல்லுலகும் படைத்தளித்துத் துடைக்கினும் ஓர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல், கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதிரத்(து) உதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக்கு அழித்தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!

சுந்தரனாரின் பின்வந்த சுந்தரத் தமிழ்க் கவிஞர் பாரதியார், கடவுளுடன் பாரத அன்னையை ஒரு நிலைப்படுத்தி.

"இவள் என்று பிறந்தனள் என்று உணராத இயல்பினளாம், எங்கள் தாய்!’

என்று பாடினார். மாக்கவிஞர் பாரதியார், கடவுளையும் தமிழன்னையையும் மனத்தில் கொண்டே பாரத அன்னையைப் பாடியதுபோல, முத்தமிழ்க் கவிஞர் சுந்தரனாரும், பரம் பொருளையும் - நாட்டன்னையையும் பாடி, அவ்விரண்டின் ஒளியுருவிலேயே மொழி அன்னையையும் வாழ்த்தினார் என்பது குறிப் பிடத்தக்கது.

இந்தத் தங்கத் தமிழ்க் கவிஞர்களின் கருத்துப் பின்னணியையே நாம், வங்கப் புகழ்க் கவிஞர் தாகூரின் தேசீயப் பாடலிலும் காண்கிறோம்-

ஜன கண மன அதி நாயக!

மக்கட்குழு உளம் ஆண்ட நாயகனே!

பாரத பாக்கிய விதாதா!

பாரத வாழ்வினுக்குரிய ஊழ்முதல்வனே!

கடவுளை

வ்வாறு விளித்தே, அவரை, நம் பாரத

நாட்டின் பல மலைகள்-ஆறுகள்-பல

னங்கள் கொண்ட