பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

219

பல்வண்ணத் தேசீய வாழ்வுக்கு மெய் வண்ண உயிர் அளிக்குமாறு உலகக் கவிஞர் வேண்டுகிறார்!

தமிழக அரசும் - பாரதப் பல்வண்ணத் தேசீயக் கனவினை நனவாக்கத் துடிக்கும் தமிழ்ப் பெருமக்களுக்கும் பெருநிகழ்ச்சி களில் ஈடுபடும்போது, தங்கத் தமிழ்க் கவிஞன் பாடலுடன் அவற்றை மங்களமாகத் தொடங்கி - வங்கப் புகழ்க் கவிஞன் பாடலுடன் அவற்றை மங்களம் பாடி முடிக்கும் மரபு, இந்த முத்திறப் பல்வண்ணத் தேசீயத்தை எவ்வளவோ

அழகுறக் குறித்துக் காட்டுகிறதன்றோ!

தமிழருக்கு - தமிழழ் தேசீய வாழ்வின் வளத்துக்கு வந்தமைத் துள்ள ஓர் அரிய அமுத வாய்ப்பு, இம்மரபு; ஏனெனில், தமிழருக்கு வழிவழி மரபாக வந்து கிடைத்துள்ள முத்தமிழ் மும்மைத் தேசீயத்துக்குரிய - ஒரு மும்மணி வாழ்த்தாக அமைந்துள்ளது.

("புத்தம் சரணம் கச்சாமி -

சங்கம் சரணம் கச்சாமி -

தர்மம் சரணம் கச்சாமி")

து

புத்தரின் இந்த மும்மணி வாழ்த்தையே, தமிழரின் இந்த முத்திறத் தேசிய வாழ்த்துப்பாடல் மரபு நினைவூட்டுகின்றது என்னல் தகும்.

-

புத்தர்பிரான் -அவர் வழிவரும் சங்கம் - அதன் வழி விளங்கும் புத்தர்பிரான் தருமம் என்ற இந்த ஒருமைப்பாட்டைப் போலவே, 'மனித இன இலக்காகிய இறை - அதை நோக்கிச் செல்லும் நாட்டு வாழ்வு அதனை இயங்கு நிழற்படமாக இயக்கிக்காட்டும் மொழி' எனத் தமிழ்த் தேசியத்திலும் மும்மை ஒருமைப்பாடு அமைந்துள்ளது காணலாம்.

-

தமிழரின் தேசீய வாழ்வுக்குரிய இத்தனிச் சிறப்பைத் தமிழி யக்கத்தாரும் - திராவிட இயக்கத்தாரும் மட்டுமன்றி, உலகப் பெருமக்கள் அனைவருமே அறிந்துகொள்ள வேண்டியவர்கள் - அறிந்து கொள்ளத் தக்கவர்கள் ஆவர்; ஏனெனில், இது, தமிழர், உலகுக்கு அளித்துள்ள உலகப் பொதுமறையான திருக்குறளைப்