புதியதோர் உலகம் செய்வோம்
[221
இந்த இரண்டு குறிக்கோள்களையும், ஒரே முழுக் குறிக் கோளாக்கும் சின்னமே மொழி - தமிழ் மொழி!
ஆன்மீகமும் உலகியலும் வெவ்வேறாகக் காணும் இயல்புடைய உலகிலே அந்த ஆன்மீகமும் - உலகியலும் ஒருங்கிணைந்து, முழு வாழ்விலக்குக் கண்ட மொழியே தாய்மொழி!
இவ்வாறு தமிழரின் கடவுட் கருத்தும், முழு நிறை கடவுட் கருத்து; இயற்கையும் நாட்டு வாழ்வும் மொழி வாழ்வும் ஒருங்கே அளாவிய கடவுட் கருத்து ஆகும்; அவர்கள் தேசீய வாழ்விலும் - மொழி வாழ்விலும், இதே முத்திறம் படர்ந்துள்ளது!
இறையாற்றலும் - மக்களாற்றலும் - மொழியாற்றலும் ஒருங்கு கூடியதே, தமிழர் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னிருந்தே கனாக்கண்டு வரும் தேசீய வாழ்வு!
இந்த மூன்றையும் மொழியுருவில் குறித்துக் காட்டுவதே முத்தமிழ்- முப்பால் வாழ்வு; கவிஞர் சுந்தரனார் குறித்துணர்த்திப் பாடிய கன்னித் தமிழ்த்தாய் வாழ்த்தின் உள்ளுறைப் பண்பும் இதுவே!
வள்ளுவர்செய் திருக்குறளை வழுவற நன்குணர்ந்தோர் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக்கு ஒருநீதி!
பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ -
எத்துணையும் பொருட்கிசைவில் இலக்கணமில் கற்பனையே!
தமிழ்த் தேசீயப் பண்பாட்டின் வழிவந்த கவிஞர் சுந்தரனார், இந்தியாவின் தேசீய வாழ்வை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அரித்து வரும் நோய்ப் பண்புகளைச் சுட்டிக்காட்டி, 'தமிழ்த் தேசீயம் எவ்வாறு இந்தியத் தேசீயத்தை மேம்படுத்தவல்லது' என்பதைக்கூட அவர், தம் தமிழ்க் கடவுள் வாழ்த்தாகிய தமிழ்த் தேசீய வாழ்த்துப் பாடலில் சுட்டிக் காட்டியுள்ளார்.
-
“சாதி நீதியற்ற சாதி வேறுபாடு, வர்க்க வேறுபாடு, சமய- இன நிற வேறுபாடுகளற்ற சமநீதிச் சமுதாயமே தமிழர் சமுதாயம்; அதுவே, வருங்கால பாரத சமுதாயமாகவும் - உலக
-