222
அப்பாத்துரையம் - 4
சமுதாய மாகவும் அமைய வேண்டும்" என்ற வள்ளுவக் குறிக்கோளை, அவர் பாட்டு நமக்கு நினைவூட்டுகிறது!
இது மட்டுமோ - அத்தகைய காந்திய சமுதாயம் அமைய வேண்டுமானால், நம் இலக்கியமும் ஒரு காந்திய இலக்கியமாக விளங்கவேண்டும்.
அதுமட்டுமோ? அறிவியல் - அதாவது விஞ்ஞானம் - வளரத்தக்க ஒரு பகுத்தறிவுச் சமுதாயம் நம்மிடையே அமைய வேண்டுமானால், விஞ்ஞானப் பண்பு வாய்ந்த இலக்கியம் நம்மிடையே வளர வேண்டும்!
"இந்த இருவகை இலக்கியங்களுக்கும் முன் மாதிரிகளாக- வழிகாட்டிகளாக பத்துப்பாட்டுப் போன்ற தமிழ்ச் சங்க இலக்கியங்கள் அமைந்துள்ளன' என்பதையும் கவிஞர் சுந்தரனார் நமக்குச் சுட்டி உணர்த்தியுள்ளார்.
மா, பலா, கதலி என்ற முப்பழங்களுமே இனிமையுடையவை யாயினும், மூன்றும் கலந்தபின் மூவினிமையாகி - இனிமையிலும் முழு நிறை இனிமையாக அமையுமன்றோ!
பாலும் தெளிதேனும், பாகும் பருப்பும் தனித்தனி நுட்பநய - வேறு பாடுடைய இனிமையுள்ளனவாயினும், அவை நான்கும் கலந்த கூட்டினிமை மேலும் சிறப்புடையதன்றோ!
இவைபோலவே, தமிழர் தொன்றுதொட்டுப் பேணி வளர்த்துவரும் இந்த முத்தமிழ் - முப்பால் பண்பு, அவர்கள் தேசீயத்துக்குத் தேசம் கடந்த மொழி கடந்த உலகளாவிய வளம் மட்டுமன்றிக் காலங்கடந்த ஒரு தெய்விக வள வாய்ப்பும் அளிக்கவல்லதாகும்.
-
குடும்ப வளம் சமுதாய வளமாகி - அதன்பின் நாட்டு வளமாவது போல, நாட்டு வளமும் மொழி வளமும் படிப்படியாக மலர்ச்சியுற்ற, உலக வளமாக அமைதல் வேண்டும்.
--
இத்தகு மலர்ச்சியைக் குறிக்கொள்ளும் தமிழ்த் தேசியம், முத்திறத் தேசியம் மட்டுமன்றி மையப் பொருட்டினின்று சிறிய, பெரிய இதழ் வட்டங்களாகப் படிப்படியாக விரிந்து செல்லும் ஆயிர இதழ்த் தாமரைபோல குடும்பத்திலிருந்து பெருங் குடும்பமாகிய நாடு - 'நாட்டிலிருந்து மாபெரும் குடும்பமாகிய
-