பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(224

அப்பாத்துரையம் - 4

தமிழ்' என்றும் போற்றியது, வெறும் சொல்லழகு வழக்கன்று பொருள் பொதிந்த ‘அர்த்தமுள்ள' வழக்கேயாகும் என்பதைத் தமிழ் மரபு வழுவாத தமிழர் உணரல் வேண்டும்.

தமிழ் தவிர - உலகில் வேறு எந்த மொழிக்கும் ‘கன்னித் தாய்' என்ற பெயர் மரபு கிடையாது!

தமிழ் தவிர - வேறு எந்தப் பழமை வாய்ந்த உலக மொழிக்கும் சங்க மரபு இருந்ததில்லை!

தமிழ் தவிர - வேறு எந்த உலக மொழிக்கும், 'முத்தமிழ்’ என்ற ஒரு மரபு வகுக்கப்பட்டிருக்கவில்லை!

தமிழின் சிறப்பு அடைமொழிகள், இந்தத் தனிப்பழஞ் சிறப்புக்களைக் குறித்தெழுந்த பழமை சான்ற வழக்குகள் ஆகும்.

பள்ளி - கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தும் உலகப் பட (World map) ஏட்டில் இருவகைப் படங்கள் உண்டு; கடல் - மலை - ஆறும், மேடு பள்ளங்களும் காட்டும் இயற்கைப் படங்கள் ஒரு வகை; இவை காலத்தால் அவ்வளவாக மாறுவதில்லை; நம் பாட்டன்மார் காலத்திலும் - தந்தைமார் காலத்திலும் நம் காலத்திலும், இவை, கிட்டத்தட்ட ஒரு தன்மையினவாகவே இருக்கும் இயல்புடையன!

ஆனால், நாட்டெல்லை - மொழியெல்லை காட்டும் மற்றொரு வகைப்படங்கள் உண்டு; இவை, நம் பாட்டன்மார் இனமறிய முடியாதபடி நம் தந்தையார் காலத்திலும் - நம் தந்தைமார் இனமறிய முடியாதபடி நம் காலத்திலும் மாறிவிடுகின்றன என்பதை யாவரும் அறிவர்!

துபோல, நம் இனமறிய முடியாதபடி வை நம் பிள்ளைகள் காலத்தில் மாறிவிடத் தக்கவை என்பதும், எதிர்பார்க்கக்கூடிய செய்தியே ஆகும்.

உண்மையில் ஆசிரியர்கள், தாம் படித்த காலத்தில் இல்லாத நாடுகள்- மொழிகள், மாணவர் படிக்கும் காலத்தில் ஏற்பட்டு விடுவதால், ஆசிரியர் எப்போதும் மாணவராக இருந்து

தாம் கற்பிப்பதை அன்றன்று புதிதாகக் கற்க வேண்டும் நிலையினையுடைய துறைகளில் இதுவும் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது.

-