புதியதோர் உலகம் செய்வோம்
1229
சில விளக்கங்களைக் கோடிட்டுக் காட்டியுள்ளார்; அவற்றுட் சில வருமாறு-
முதலாவதாக
-
-
தமிழ்நாட்டில் மட்டுமன்றி மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற பல உலக நாடுகளிலும் தமிழ் மொழி முக்கியமான ஓர் அங்கமாய் - ஆட்சிக்குரிய படிநிலை பெற்றும், பெறும் நிலைக்குரிய தகுதியுடையதாகவும் இருந்து வருகிறது; அத்துடன், தென் ஆப்பிரிக்கா, மோரிசுத் தீவு, தென் பசிபிக் பகுதியிலுள்ள பிஜித் தீவு, தென் அமெரிக்கப் பகுதியிலுள்ள திரினிதாது, கியூபாத் தீவு முதலிய உலகளாவிய பல்வேறு இடங்களிலும், தமிழ்மொழி - தமிழ்ப் பண்பாடு ஆகியவை, மக்கள் வாழ்க்கையில் தொடர்ந்து இடம் பெற்றே வருகின்றன! ரண்டாவதாக
உலகின் கடலோடிப் பேரினங்களிலே தமிழினம், மூவாயிர - நாலாயிர ஆண்டுகளுக்கு முன்னிருந்தே ஒரு முதன்மை வாய்ந்த இடம் பெற்றதாய் இருந்து வந்துள்ளது.
மூன்றாவதாக-
தமிழ் மொழி, ‘உலகின் உயர் தனிச் செம்மொழிகள்’ என்ற பெருமைக்குரிய கிரேக்கம், இலத்தீனம், சமஸ்கிருதம் ஆகிய பண்டைப் பெருமொழிகளுடன் போட்டியிடத்தக்க நிலையில், பண்டைப் பேரிலக்கியம் உடையதாகவும், அதே சமயம், தற்கால நாகரிக உலகப் பெருமொழிகளான ஆங்கிலம் - பிரெஞ்சு - செர்மன் போன்ற மொழிகளுடன் ஒரு தற்காலப் பெருமொழியாக இன்றும் உயிர்வளம் குன்றாது வளர்ந்து வருவதாகவும் உள்ளது!
நான்காவதாக
நாகரிக உலகுக்கு இன்றும், இனியும், இனிமை - இன்னலம் ஊட்ட வல்ல பல உயர் கருத்துக்களை பண்பாட்டுக் கூறுகளைத் தமிழ் மொழி, மனித நாகரிகத் தொடக்கக் காலத்திலிருந்தே லக்கியப் பரப்பிலும் -வாழ்விலும் வரலாற்றிலும் -மிகு பேரளவில் கொண்டதாக இயங்குகிறது; இவற்றுள், நாடு - மொழி எல்லை கடந்த ஓருலகக் கருத்தார்வம் - மூலமுதற்
-