பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

233

தமிழர், இன்று உலகளாவப் பரவியுள்ளதற்கு, ‘அவர்கள் உழைப்பாற்றல் ஒன்றே காரணமானது' என்று கருதுபவர் உண்டு; இது, முழு உண்மையன்று; 'செட்டி கெட்டாலும் பட்டு உடுப்பான்' என்ற பழமொழியை நினைவூட்டும் முறையிலே, தமிழினத்தவர் பெரிதும் உழைப்பாளராக இன்று நாடிச் செல்லும் தேசங்கள் உண்மையில் முன்னம் அவர்கள் முன்னோர்கள் ஆட்சியும் - கலையும் வாணிகமும் - தொழிலும் ஒருங்கே பரப்பிவந்த அவர்களின் உடன்பிறந்த னத்தவர் நாடுகளே ஆகும்.

-

தென்கிழக்காசியாவும், ஆப்பிரிக்காவும், அமெரிக்காவும்- ஐரோப்பாவும்கூட - உண்மையில் தமிழருக்கு முற்றிலும் அயல் நாடுகள் அல்ல; ஆயிர - பதினாயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்னிருந்தே, தமிழினத்தவர் பரவிச்சென்று, குடியமைத்து வாழ்ந்த உலகப் பகுதிகளே இவை! அமெரிக்க தொல்பொருளாய்வு அறிஞரும், தென்கிழக்காசிய வரலாற்று - கலை இலக்கிய - சமயப் பண்பாட்டு விளக்க அறிஞரும், மேலை ஐரோப்பிய அறிஞரும் சிறுகச் சிறுக ஆய்ந்து காட்டிவரும் மெய்ம்மைகளே இவை! - உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினர் முழுதும் ஆராய்ந்து, விரிவிளக்கம் காண்வேண்டிய துறை இது!

தென்கிழக்காசியாவை, 'கிழக்கிந்தியா' (கிழக்கிந்தியத் தீவுகள் இந்து சீனா) என்றும், அமெரிக்கப் பழங்குடியினரையும் அவர்கள் தாயகத்தையும், 'செவ்விந்தியர் - மேற்கிந்தியத் தீவுகள்’ என்றும் ஐரோப்பியர் அழைத்ததற்குக் காரணம், அங்கெல்லாம் இந்நாள்வரை பரவலாகக் காணப்படும் இந்திய நாகரிகச் சாயலே ஆகும்!

அறிஞர்கள், இந்த இந்தியச் சாயலைக் கூர்ந்து ஆராய்ந்து நோக்கி, 'இது இந்தியச் சாயல் மட்டுமன்று - தொல்பழங்கால இந்தியச் சாயல் அதாவது, தமிழின இந்தியச் சாயல்' என்று மெய்ப்பித்துக் காட்டி வருகின்றனர்!

-

சிங்கள மொழியில், பாரதம் மொழி பெயர்த்தவர்கள், அதைத் தமிழ்ப் பாரதத்திலிருந்து மொழிபெயர்த்ததாகவே கூறுகின்றனர்.