234
அப்பாத்துரையம் – 4
சங்க காலத்தில், பெருந்தேவனார் என்ற சங்கப் புலவர், பாரதத்தை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக இயற்றியிருந்தார் என்பதைத் தமிழ்ப் புலவர் யாவரும் அறிவர்.
சங்க காலத்திலும் அதற்கு முற்பட்டும்கூட, பாரதமும் - இராமாயணமும், தமிழில் 'தோல்' என்னம் பண்டைக்கால மக்கட்பால் வகையாக நிலவின என்று அறிகிறோம்.
தென்கிழக்காசியாவெங்கும்
இவையே, பாரத
ராமாயணங்களாகப் பரவி இருந்தன என்று கருத இடமுண்டு. இது எவ்வாறாயினும் ஆகுக -
சிங்களம்
இந்தோனேசியம்,
மலாய் முதலிய தென்கிழக்காசிய மொழிகள் அனைத்திலும் முதன்முதல் அமைத்த இலக்கியம், புறநானூறு போன்ற பாடல்கள், புறநானூற்றின் மொழி பெயர்ப்புகள் போன்றேதான் இயன்றன' என்பதை, அம்மொழி இலக்கிய வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.
தென்கிழக்காசியாவெங்குமுள்ள மக்கள் பழக்கவழக்கங்கள்- நாட்டிய, நாடகக் கலைகள்-பண்பாடுகள் பெரிதும் கேரளத்தையும், வங்கத்தையும், காசுமீர-நேபாள-அசாமியப் பரப்பையும் நினைவூட்டுவனவாகவே உள்ளன என்பது, கூர்ந்துணர்ந்து காண்டற்குரியதாகும்.
பண்டைச் சேரரைப் போலவே சீனரும், தங்களை 'வானவர்' என்று கூறிக்கொண்டனர் என்பதும், பெண்ணுரிமைத் தாயம் இவ்வெல்லா நாடுகளிலும், தென் பசிபிக் இனங்களிலும் பரவலாகக் காணப்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க செய்திகள் ஆகும்.
தன்பாண்டி நாடு கல்வெட்டுகளில், 12ம் நூற்றாண்டு வரையிலுமே தமிழ்நாடு மறவர் நாடு - பெண்கள் நாடு என்று அழைக்கப்பட்டது.கி.மு.நான்காம் நூற்றாண்டிலேயே, கிரேக்க அறிஞர் மெகாஸ்தனிஸ், இதனை, 'அல்லி நாடு' என்று குறித்துள்ளார்.
தென் கிழக்காசியாவில் இந்தோனேசியப் பகுதியில் - சிறப்பாகப் பாலித் தீவில் நாம் இன்றும் தொல் பழங்கால