புதியதோர் உலகம் செய்வோம்
-
235
இந்தியாவின் - அதாவது, தமிழின இந்தியாவின் சமய மரபுகளை மட்டுமன்றி, உபநிடத கால சங்ககாலப் பண்பாட்டையே காண்கிறோம்.
தென் அமெரிக்காவிலும், நடு அமெரிக்காவிலும் இது போலவே ஐரோப்பியரின்-சிறப்பாக ஸ்பானியரின் அட்டூழியங் களுக்கும்,கொள்ளை- சூறையாட்டுகளுக்கும் ஆளாகி அழிவுற்ற பெருவிய ‘இங்கா' நாகரிகம் (கி. பி. 14-15ம் நூற்றாண்டுகள்), வரலாற்றிலே திருவள்ளுவரின் அரசியல் இலக்கணத்துக்குரிய ஒரு கண்கண்ட இலக்கியமாக - உலகின் ஒரே சமதர்மப் பேரரசு என்றும், தற்கால உலக நாகரிகத்துக்கே பலவகையிலும் பயன்பட்டு வரும் ஒரு முன்னோடி வாழ்வு என்றும் வரலாற்றறிஞர்களால் சிறப்பிக்கப்படுவதாய் அமைந்துள்ளது.
இந்த 'இங்கா' நாகரிக - தமிழ் நாகரிக ஒப்புமை ஆய்வும், வருங்கால உலகத் தமிழ் இயக்கத்தார் தனிக்கவனத்துக்குரிய ஒன்று ஆகும்.
'இங்கா' நாகரிகத்துக்கு நெடுநாட்களுக்கு முன், ‘அமெரிக்காவின் அதிசய நாகரிகம்' என்று கூறப்படும் ‘மய நாகரிகம்' இன்று புதை பொருள் படிவமாகவே நிலவுகிறது! இது, கி.பி. 4ம் நூற்றாண்டிலிருந்து 12ம் நூற்றாண்டுவரை நிலவியிருக்கக்கூடும் என்று அமெரிக்க வரலாற்றறிஞர்கள் கருதுகிறார்கள்!
அமெரிக்காவின் மய நாகரிகம், அகல் உலக மனித நாகரி கத்திலிருந்து முற்றிலும் ஒதுங்கித் தனிப்பட்டதாகவே வளர்ந்தி ருந்தாலும் சில அடிப்படை வளர்ச்சிக் கூறுகளில் அது தமிழின இந்திய நாகரிகத்திலிருந்து வேறுபட்டே வளர்ந்திருந்தாலும் - கட்டடக்கலை, மலையுருவங்கொண்ட கோயிற் கோபுரக்கலை, வான நூற்பயிற்சி ஆகிய வகைகளில், அது, அவ்வக்காலத்தில் - அதே சம காலத்திற்குரிய தென்னக தமிழக வளர்ச்சிப் படிகளுடன் ஒத்திணைந்த வளர்ச்சிப் படிகளை உடையதாய் அமைந்திருந்தது என்று அறிகிறோம்.
-
க
இரட்டையராகப் பிறந்த இரு குழந்தைகள் - வேறு வேறு சூழ் நிலைகளில், எப்படி வேற்றுடையிடையே மூல ஒற்றுமை உடையவர்களாய் சரிசம இணை வளர்ச்சி உடையவர்களாய்க்
-