பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(238

அப்பாத்துரையம் – 4

நல்வாழ்வின் - உன் அண்ணன் தொலைவாற்றல்மிக்க அறிவுக் கண்பார்வை கனாக்கண்டு அவாவிய ஆக்கப் பெருவாழ்வின் தொடக்கம் ஆகும்!

நீ உண்மைத் தமிழனாக வாழப்போகும் நாளின் விடியல்தான் அந்த இறுதி வெற்றி; அதுவரை, உன் தோல்விகளும் சரி - வெற்றிகளும் சரி - இரண்டுமே, இருளூடாக ஒளி நோக்கித் தள்ளாடிச் செல்லும் ஒருவனது இடையிடைத் தளர்ச்சிகளும் - கிளர்ச்சிகளுமேயாகும்!

ஆகவே, வெற்றியிலும் சரி - தோல்வியிலும் சரி - உன் இன இலக்கு என்றே நோக்கி ஏறு முன்னேறு! வீறுடன் ஏறு, முன்னேறு!

னேறு!

கொண்ட வெற்றியை விடாது பற்றிக் கொண்டு ஏறு - முன்

தோல்வி வந்தால்கூட, அதையே ஒரு பிடிப்பினையாக ஊக்குவிக்கும் கருவியாகக் கொண்டு, இடைவிடாது ஏறு முன்னேறு!

சிங்க மரபில் வந்த சீரார்ந்த செந்தமிழ்க் குருளையே! உன் நோக்கு சிங்கநோக்காக இருக்கட்டும்!

-

நீ உன் மரபின் பெருமையினை - உன் தந்தையின் பெரும் புகழை - உன் அண்ணன் கண்ட அறவழியை உன் தானைத் தலைவன் நடத்தி வந்துள்ள - நடத்திவரும் அறப்போரை - ஆற்றியுள்ள ஆற்றிவரும் சாதனைகளைத் திரும்பிப் பார்! பெருமையுடன் நெஞ்சம் விம்மப் பின்நோக்கிப் பார்! ஆனால், அங்ஙனம் திரும்பிப் பார்ப்பதனுடன் அமைந்து நின்றுவிடாதே! உன் நோக்கும், சிங்க நோக்காகவே இருக்கவேண்டும் என்பதை மறந்துவிடாதே!

நீ, சிங்கமரபில் வந்த சிங்கம்

“கற்றது கைம் மண்ணளவு கல்லாதது உலகளவு

-

உன் செந்தமிழன்னை இவ்வாறு பாடியது - இடித்துக் காட்டிப் பாடியுள்ளது பொதுவான அறிவுத் துறைக்கு மட்டுமன்று - உன் சாதனைத் துறைக்கும் சேர்த்துத்தான்!