240
அப்பாத்துரையம் - 4
நிறைவேற்றத் துடியாய்த் துடிப்பது கண்டு, துயிலிடையிலும், தன் செவ்விதழ்கள் காட்டி, முறுவலிக்கிறான் - பார்!
கதிரவனின் ஒளி வீசும்போது, பிறிதொளி ஒளிர முடியுமா முடியாதே! ஆயினும், உன் அண்ணன் புகழொளிக்குள்ளேயும் ஒரு புகழ்ச் சுடர் மணியாய் விளங்கிய உன் தானைத் தலைவன் - அண்ணன் தன் புகழில் தானே துயில்கொள்ளச் சென்ற காலையில், கதிரவனொளி வாங்கி- அதன் வெம்மையெலாம் தானே தாங்கி -உலகுக்குத் தன்ணொளியாக, அச்செவ்வொளியைப் பாலொழுக்கி வழங்கும் தண்மதியமே போல அவன் புகழேட்டுக்குப் புதுப்புதுப் பேருரைகள் வகுக்கவில்லையா?
உன் தந்தை மரபு, உன் மரபு தானே!
உன் அண்ணன் குருதி, உன் குருதிதானே!
-
உன்தானைத் தலைவன் உள்ளத்தில் அலைபாய்ந்து - நாடி நரம்புகள் எங்கும் துடிதுடித்தோடும் உயிர்ப்பு உன் நாடி நரம்புகளின் - உன் உழைப்பாற்றலின் பொங்கு மாவளம் தானே! ஆகவே, நீ புகழ் பாடிய போதும்! புகழ் ஆக்கு புதுப் புகழ் படைத்து ஆக்கு!
-
-
இதுமட்டுமோ - இது போதாது!' கதிரவனொளி உருவில், கரந்துலவும் கரும் பொட்டுக்கள் உண்டு' என்று கூறுவர் இயல் நூலோர்! அது போல, உன் புகழொளியில் கரந்துலவும் இகழ்க் கூறுகளை இகழ்க் கூறுகளில் நிழலை - சாயலைக் கூடத் தேடி ஆய்ந்து விலக்கிவிட விரைவாயாக!
ஏனெனில், புகழ் உன் குருதியானால், இகழ் அதில் வளரும் நோய் நுண்மமாக இருக்கக்கூடும்!
உன் வரலாற்றைத் திரும்பிப் பார்! அதன் படிப்பினைகளில் கருத்து உனக்கு!
திராவிட இனம் தாழ்ந்ததேன்? - உலகம் ஆண்ட இனம், ன்று உலகில் தனக்கு உரிய இடம் இன்றித் தத்தளிப்பதேன்?
உன்னிலும் பிந்திவந்த இனங்கள் நேற்றுப் பிறந்த இனங்கள் முன்னேறி, நீ அவற்றை எட்டிப்பிடிக்க முடியாமல் அலமருவதேன்?