பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

நெல்லிக்காய் மூட்டை”

[241

“திராவிடனிடம் ஒற்றுமை கிடையாது; அவன் ஒரு இவ்வாறு கூறியுள்ளனர், தன்மான இயக்கக் காலத்திய உன் முன்னோராகிய அறிவு மரபினர்!

-

உன் தந்தை இதைப் பொய்யாக்கினார்!

உன் அண்ணன் இதைப் பொடிப் பொடியாக்கினான்!

உன் தானைத் தலைவன் இதை மறக்கடித்துள்ளான்! அவர்கள் மரபில் வந்த நீ, அதற்கு மீண்டும் இடம் கொடாதே!

“திராவிடம் பழம் பெருமை பேசிக் காலம் கழிப்பான்! புதுப் பெருமைகள் அவனைச் சூழ்ந்து கவிந்து வந்து அவனை வென்று விடும்” -உன் பழங்கால எதிரிகள் பேசிய பேச்சு இது!

உன் திராவிட இயக்க மரபு இவ்வசையைத் தூக்கி எறிந்து விட்டது!

இதுமட்டுமோ? - சங்கப் பாடல்களில் ஒரு வரியாவது, 'பழம் பெருமை பேசித் தனக்கு ஆறுதல் கூறிக்கொண்டது என்று எவராவது கூற முடியுமா?

"

பழம் பெருமை பேசி மழுப்புவது என்பது உன் மரபுப் பழியன்று - உன் தூய தனி மரபுக்குரிய பழியன்று - உன் மரபிடையே புல்லுருவியாய் நுழைந்து, தம் மரபை ஒட்டவிட்ட போலிகள், உன் இனமீது வளர்த்துவிடும்- வளர்ந்து வரும் பழி இது!

போலி நீக்க - புலியே, நீ எழு! சாவி போக்கி - நெல் மணியே - நீ பொங்கியெழுந்து பொலிவுறு!

உன் மெய்யான பழம் பெருமைகள் நினைக்க - பழம் பெருமைகள் விளக்கம் - பழம் பெருமைகள் வளர்க்க - நீ தயங்க வேண்டாம்!

ஆனால், எது உன் மெய்யான இனப் பழமை? எது உன் இனத்தின் மெய்ப்பெருமை என்பதையும், என் உன்மீது பகைப் புலங்கள் ஏவிவிடும் - நீ தூங்கிவிழும் நேரம் பார்த்து உன்மீது சுமத்தி விடும் போலிப் பழைமை அயலார் பெருமையாகிய போலிப் பெருமை என்பதை பகுத்துணர்வாயாக - வேறுபடுத்தி உணர்வாயாக!