பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

243

வாழ்வின் மீது யார் யாரோ புகுத்த முற்பட்ட -புகுத்திய காலத்தில், 'திரு' என்ற பழந்தமிழ்ச் சொல்லையே வற்புறுத்தி வழங்கும்படி போராடி வெற்றி கண்ட இயக்கம் - மரபு எது?

'திரு' என்பதைத் 'திருதிரு' என்றும், 'திரு-டன்' ‘திரு-டி என்றும் கேலி கிண்டல் செய்யத் தூண்டுதல் தந்த இயக்கப்போலி - இனப்போலி எது?

‘வானொலி' என்ற அழகிய சொல்லை உருவாக்கித்தந்த இயக்கம் எது?

'ஆகாசவாணி' தான் வேண்டும் - என்று வற்புறுத்தும் - வற்புறுத்த முடியாதபோது மறைவிலாது முணுமுணுக்கும் இயக்கம் எது -இனம் எது?

'மதறாஸ் நாடு சென்னை நாடு' என்பவைதான் பழம் பெயர்கள்; இலக்கியமறிந்த

வரலாறறிந்த பெயர்கள்;

'தமிழ்நாடு' என்ற புதுப்பெயர் எதற்கு? என்று தமிழியக்கியம் கரைத்துக் குடித்தவர்கள்போல

தமிழக

அறிந்தவர்கள்போலக் கூறியவர்கள் இயக்கம் எது?

வரலாறு

காந்தியடிகள் காலத் தேசியவாதிகள் வழங்கிய - தேசியக் கவிஞர் பாரதியார் வாயாரா வழங்கிப் பாடிய - 'தமிழ்நாடு' என்ற பெயரை ஒரே நொடியில் ஆட்சியிலும், சட்டத்திலும் ஏற்றுவித்த தென்னாட்டுக் காந்தியின் பிறப்புரிமை இயக்கமாகிய உண்மைத் தேசிய இயக்கம் எது?

இந்தப் பெருமைகள், உன் பெருமைகள் மட்டுமல்ல - உன் உரிமைகள்! உன் மரபுரிமைகள் - மரபு விளக்கங்கள்!

-

இவற்றை மறக்கடிக்க உன்னுடன் ஒட்டி உறவாடுகின்ற வர்கள் - தமிழரே போன்ற - தமிழரே போல நடிக்கும் தமிழ்ப் போலிகள் முயல்வர் - முயலக்கூடும்; முயல்வது இயல்பு; ஆனால் நீ இவற்றை மறந்துவிட வேண்டாம் - தமிழகமும் மறக்கும்படி விட்டுவிட வேண்டாம்!

>

அதே நேரத்தில், ‘இந்த மாபெரு வெற்றிகள் - அரும்பெருஞ் சாதனைகளைக்கூட, உன்மாற்றாரின் ஆதிக்கக் கோட்டையின் மதிற்சுவரில் ஒரு கீறல் ஏற்படுத்தும் அளவான வெற்றிதான் கண்டுள்ளன- ஆதிக்கக் கோட்டை இன்னும் ஆதிக்கக் கோட்டையாகத்தான் இருக்கிறது' என்பதை நீ மறந்துவிடாதே-

-