பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உ. சிலப்பதிகாரத் தமிழகம்: உலக நாடக இலக்கியத்தின் தலையூற்று!

வளர்த்து வரும்

மனிதன் வளர்த்துக் கொண்ட பண்புகளில், மாபெரும் பண்பு, மொழி; குடும்பத்தையும் சமுதாயத்தையும் ஆக்கி, தலைமுறை தலைமுறை கடந்து மனித இனத்தை வளர்த்து வரும் பண்பு அது! அதுவே வாழ்க்கையின் தாய் கலைகளின் தாய் - இயல் நூல்களின் தாய்!

இத்தகைய தாய்ப் பண்பாகிய மொழியையே கருவியாகக் கொண்டு வளர்பவை முத்தமிழ்!

-

தமிழன் இவற்றைக் ‘கலைகள்' என்று வழங்காமல், ‘மூன்று தமிழ்' - அதாவது, ‘முத்தமிழ்’ என்று வழங்கிய அருமைப்பாடு நினைந்து நினைந்து மகிழ்ந்து வியந்து பாராட்டுதற்குரியதாகும்.

-

மொழியை, 'மூவா இளமைப் கன்னித்தாய்' என்று தமிழன் தவிர வேறு எந்த மொழியினரும் கொண்டதில்லை!

அதுபோல, மொழியை, 'மும்மை மொழித்தாய் முத்தமிழ்க் கன்னித்தாய்' என்றும் தமிழன் தவிர வேறு எந்த மொழியினரும் கொண்டதில்லை!

தமிழனின் மொழி கடந்த-நாடு கடந்த-உலகளாவிய தேசியத்துடனும், தமிழனின் நாடு-மொழி-இனம் கடந்த-கால இடம் கடந்த- சமயம் கடந்த- கடவுள் தத்துவத்துடனும், இந்த இரு கருத்துக்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு!

உலகில், கலை கண்டு வளர்த்தவன் மனிதன்!

அழகுக் கலையாகிய கவின் கலை கண்டு வளர்த்தவன்

நாகரிக மனிதன்!

-

-