பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

247

கவின் கலைகளிலும் முதன்மை வாய்ந்த அரும்பெருங்கவின் கலைகளாக முத்தமிழ் கண்டு வளர்த்தவன் தமிழன்!!!

கலை - மனித இனத்தின் பொதுச் செல்வம்!

நாகரிகம் வளருந்தோறும் கலைகள் தொகையில் மட்டுமன்றித் தன்மையிலும் வளரத் தொடங்கின!

நாகரிக வளர்ச்சியிடையே, கலைகளில் - பொது நிலையான கலை, சிறப்பு நிலையான கலை அல்லது கவின் கலை என்ற பாகுபாடு ஏற்பட்டது.

தமிழின் நாகரிகம், இந்த இரு பிரிவுகளுக்கும் மேம்பட்ட மொழி சார்ந்த கவின் கலையான முத்தமிழ் என்ற தனிப்பெரும் பாகுபாட்டினைப் பல்லாயிர ஆண்டுகட்கு முன்னரே கண்டது- கண்டு வளர்த்து வந்தது.

பண்பு!

கலை என்பது, மனித இன வாழ்க்கைக்கான கருவிப் பண்பு; வாழ்க்கை வளங்களை வாய்ப்பு நலங்களை மேம்படுத்தும்

உழவு, நெசவு, தேனீ வளர்ப்பு, பட்டுப்பூச்சி வளர்ப்பு ஆகியவை இத்தகு கலைகள்.

மனித

‘கவின் கலை' என்பது வாழ்க்கைக் கருவியாகமட்டும் அமையாமல், வாழ்பவனாகிய மனிதனையே உள்ளத்தையே மேம்படுத்தும் பண்பாகவும் இயல்கின்றது; அது அழகுணர்வு மூலம் உடனடி இன்பமும் தந்து - அத்துடன் நின்றுவிடாமல், இயற்கையை வென்று ஆட்கொண்டு - இயற்கை கடந்த பொன்மயமானதொரு புதிய குறிக்கோள் வாழ்வை - இயற்கை கடந்த ஒளிமயமானதொரு குறிக்கோள் உலகைப் படைத்தாக்கும் அவாவையும், ஆற்றலையும், மனித உள்ளத்தில் தூண்டி வளர்த்துவிடுவது ஆகும்!

ஓவியம், சிற்பம், ஆடல்பாடல் முதலியவை இத்தகு கவின் கலைகள் ஆகும்.

தமிழினம் தனக்கென வகுத்துக்கொண்ட ‘முத்தமிழ்' என்ற வகுப்பு- இயல், இசை, நாடகம் ஆகியவை; இவை மூன்றுமே, கவின் கலைகளும் கடந்த சிறப்புடைய இனக் கலைகள்; ஏனெனில்,