248
அப்பாத்துரையம் – 4
இம்மூன்றும் மட்டுமே மொழியுடன் பிறந்து வளர்ந்து அம்மொழியையே வளர்த்து - அம்மொழி வளர்ச்சியுடன் தாமும் வளர்ந்து - மனித இனத்தையும் மேம்படுத்துபவை ஆகும்.
முத்தமிழில் முதல் தமிழ், ‘மற்ற இரண்டையும் தன்னகத்தே அடக்கிய தமிழ்' என்ற சிறப்பு, நாடகத் தமிழுக்கு உரியதாகும்.
இதனாலேயே தமிழன், கடவுளை அன்னை வடிவாக கன்னி அன்னை வடிவாகக் கன்னியாகுமரியிலும்; முத்தமிழ் அன்னை வடிவாக - முத்தமிழையும் மூன்று மார்பகங்களாகக் காண்ட மீனாட்சியம்மை வடிவாக முத்தமிழ்ச் சங்கத் தலைமையிடமாம் மதுரையிலும்; நாடகத் தமிழ்த் தெய்வ வடிவமாகச் சிதம்பரம் என்னும் தில்லை மூதூரிலும்
கொண்டான்!
கன்னி அன்னையாக ஆடலரசியாக விளங்கிய தமிழன்னை, வழிபாடு கடைச் சங்க காலம் வரையில்கூட ஆடல் நங்கையாராலேயே நடத்தப்பட்டது என்பதும், அந்த வழிபாட்டின் ஒரு பகுதியாகவே முத்தமிழ்ப் புலவோரின் சங்கம், மதுரை மூதூரில் பண்டு நிறுவப்பட்டிருந்தது என்பதும், தமிழக வரலாறும், தமிழிலக்கியமும் காட்டும் செய்திகள் ஆகும்!
உலகம் முழுவதுமே இந்த அன்னை வழிபாடு, பண்டு பரவியிருந்தது என்பதும், தமிழகத்தின் இசை வேளாளர் போன்ற ஒரு கலை நங்கையர் வகுப்பே உலகெங்கணும் - எகிப்திலும், லிடியாவிலும், கிரீசிலும், சப்பானிலும் இறை வழிபாடு ஆற்றி வந்தனர் என்பதும் உலக வரலாறு தெளிவுறுத்தும் செய்திகள் ஆகும்.
பண்டை இந்தியா முழுவதும் மட்டுமன்று - பண்டை உலகெங்கணுமே ஆடற் கன்னித் தாயரசியான முத்தமிழன்னை வழிபாடுதான் பரவியிருந்தது என்பதும், முதல் முதல் கடவுள் வழிபாட்டுக்கான மந்திரங்களும் உலகெங்கணும் தமிழ் மந்திரங்களாகவே நிலவியிருந்தன என்பதும், உலகளாவிய வரலாற்றாய்வாளர் ஆராய்ச்சிக் கண் திறந்து காணவேண்டிய மெய்ம்மைகள் ஆகும்.
ஆடல் நங்கையர்
வகுப்பினர்களே பண்டைத் தமிழகத்திலும் உலகம் முழுவதிலும் புரோகிதராக - தமிழந்தணர்
-