பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

249

அல்லது பார்ப்பாராக இருந்ததுடன், அவர்களே தமிழகத்தின் - உலகின் முதல் அரசராகவும் நிலவியிருந்தனர்!

அன்னையின் சேயாக -அழகுத் தெய்வமாக விளங்கிய முருகவேள் வழிபாட்டினர் என்ற முறையில், அவர்கள், 'வேளாளர்' என்று அழைக்கப் பட்டதுபோலவே, 'இன ஆட்சியாளர்' என்ற முறையில் அவர்கள் 'வேளிர்' என்றும் அழைக்கப்பட்டனர்!

தமிழ்த் தேசியத் தெய்வத்தை வழிபட்ட அவர்கள் ஆண்ட நாடும், தமிழ்நாடு வேணாடு (வேள்நாடு) - பெண்கள் நாடு அல்லது கன்னி நாடு என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது!

‘கன்னி' அல்லது 'குமரி' என்ற பெயருடைய மலையும், ஆறும், மீனும் உண்டு.

‘கன்னி’ அல்லது 'குமரி' என்ற சொல், இவ்வாறு, தமிழர் தேசியத் தெய்வம் தேசிய மலை - தேசிய ஆறு - தேசியச் சின்னமாகிய கன்னி மீன் - கன்னித் தமிழ் மொழி - கன்னி நாடு ஆகிய அனைத்தின் பெயர்களாகவும் இன்றளவும் விளங்குவது காணலாம்.

அந்தக் கன்னியும், 'மூவா இளமைக் கன்னி' என்றும், 'ஆடும் நாடகக் கன்னி’ என்றும், கருத்தில் மறவாது கொள்ளவேண்டிய செய்திகள் ஆகும்!

-

நாடகம் இவ்வாறு தமிழர் தெய்வமாக - தமிழர் நாடாக - தமிழர் மொழியாக தமிழர் தேசியக் கலையாக விளங்குவது மட்டுமன்றி, தமிழர் உலகளாவ வளர்த்த ஓருலகத் தேசியக் கலையாகவும் திகழ்கின்றது!

முத்தமிழ்க் காப்பியம் என்றும், நாடகக் காப்பியம் என்றும் புகழப் பெற்றுவரும் சிலப்பதிகாரத்துக்கும் - தமிழியக்கத்தின் மலர்ச்சியாகிய திராவிடப் பேரியக்கத்துக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு.

ஆம்! சிலப்பதிகாரம், தமிழரின் முத்தமிழ்த் தேசியக் காப்பியம் மட்டுமன்று; அது, தமிழரின் முத்தமிழ் நாடக அன்னையாகிய கடவுளை வழிபடுவதற்காகவே இயற்றப்பட்ட தமிழரின் முத்தமிழ் வேதமும் ஆகும்!